தினமணி – 09 – 01 – 2021 பக்கம் 8
‘ திருவாசக மொழிபெயர்ப்பு – பணிவும் துணிவும் ‘
கனிவுரை …
அன்புள்ள ஆசிரியருக்கு…..
1.உண்மை ,புகழ்ச்சி இல்லை
—————————————————————–
மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ஒளவை அருள் எழுதிய ‘ திருவாசக மொழிபெயர்ப்பு – பணிவும் துணிவும் ‘ கட்டுரை ( 2 – 1 – 2021 ) படித்தேன்.
பாதிரியார் ஜி.யூ. போப்பின் மொழிபெயர்ப்புக் குறைபாடுகளையும் மீறி பாலசுப்பிரமணியம் அதனை போற்றிப் புகழ்ந்தது.
இந்து மதத்தின் சகிப்புத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
இது தொடர்பாக நான் அறிந்த மற்றொரு செய்தி. தனது மதத்திற்குப் பணியாற்ற இந்தியா வந்த ஜி.யூ. போப் , இந்து மத நூலான திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பதற்காக இலண்டனில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாராம்.
அவரை விசாரணை செய்தவர்கள் அவரின் திருவாசக மொழிபெயர்ப்பைப் படித்து விட்டு, திருவாசகத்தின் அருமையை உணர்ந்து விசாரனையைக் கைவிட்டனராம்.
” திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் ” என்பது உண்மை . வெறும் புகழ்ச்சி இல்லை .
நந்தினி இரமணன் ,
தென்காசி.
2.பெரும்புகழ்
———————————
மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் ஒளவை அருள் எழுதிய ‘ திருவாசக மொழி பெயர்ப்பு – பணிவும் துணிவும் ‘ கட்டுரை ( 2 – 1 – 2021 ) படித்தேன்.
நாத்திகராக விளங்கிய கே.எம். பாலசுப்பிரமணியம் திருவாசகத்தைப் படித்து அதன் மீது ஈர்ப்பு கொண்டு அதனை ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்த்து பெரும்புகழ் கண்டவர்,
போப் பாதிரியாரின் மொழி பெயர்ப்பில் பல சொற்றொடர்களுக்குத் தடுமாற்றத்தால் தவறான பொருள் கொண்டுள்ளதாக வருந்தினார்.
ஆயினும், போப் பாதிரியாரை மிகவும் போற்றிப் பாராட்டி, ‘ மாணிக்க மாலை ‘ என்னும் தனது நூலில் அவருடைய பெருமைகளைப் போற்றியுள்ளார்.
அ. சிவராம சேது.
திருமுதுகுன்றம்.

Add a Comment