POST: 2022-09-22T10:40:44+05:30

பெருந்தகையீர் ,
வணக்கம் .

தாங்கள் பரிவோடனுப்பிய
நூல் வரப்பெற்றேன் .

தங்கள் எண்ணமும் – எழுத்தும் – செயலும்
எனக்கு எப்போதும் பிடிக்கும் .

கலையாழமும் மனிதநேயமும்
உங்கள் உதிரத்தில்
உறைந்து கிடக்கின்றன .

தமிழகத்துக்கு வாய்த்த
கலைப்புதையல் நீங்கள் .

வாழ்க !

அன்போடு
ஒளவை நடராசன்

பெருமதிப்பிற்குரிய
திரு.அவ்வை நடராஜன் அவர்களுக்கு.

வணக்கம்.

என் மீதும், என் படைப்புகள் மீதும் தாங்கள் வைத்திருக்கும்
மதிப்பீடுகளுக்கும் மரியாதைகளுக்கும் நான் என்றென்றும் நன்றியுடையேன்.

தங்களைப்போன்ற தமிழ்ச்சான்றோரிடம்
வாழ்த்து பெறுவதை பெரும் பேறாக நான்
கருதுகிறேன்.

நன்றியுடன்,

ஞான ராஜசேகரன்
14.6.2022

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *