அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 126
‘கல்விச் செம்மல்’ தமிழவேள். த. வே. உமாமகேசுவரனார்
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
எழிலேட்டில் இடம்பெற்ற ‘Tamil Heritage’ என்னும் தலைப்பிலான கட்டுரை:
“The earliest epoch in the civilization of the Tamils is the age in which heroism was exalted to the position of a religion.
Life in those remote times was strenuous and the hero who won renown by steady perseverance and indomitable courage either in the battlefield or in the more peaceful vocations of life was held up as the Ideal to be followed.
The acquisition of fame was considered to be a motive sufficient in itself for virtuous action and the performance of strenuous deeds of valour.
Nevertheless there was a belief in a future existence.
The whole valour was sung by bards here on earth, was considered to have carried sufficient merit for mounting the celestial car which carried the soul in its ascent to the abode of the Immortals.
The generous impulse to give was often carried to a fault by the princes and chieftains of ancient Tamil land.
The story of Sibi, the Chola King who helped a dove in distress by offering his own royal flesh as the necessary ransom, and the story of Kumanan, who was willing to give away his head to help a needy poet, are stories which every Tamill child ought to remember and cherish.
The Purananuru, an anthology of four hundred heroic poems, from which we have so for quoted is a national saga of the Tamilians.
The names of many noble princes and great poets, as well as several Incidents connected with their lives, would have been entirely lost to us had they not been treasured up in this great anthology
The Kali-Togai containing one hundred and fifty exquisite lyrics, the Pari-padal which in its present form contains twenty-two “songs of praise” on Tirumal Muruga, the river Vaigal and the city of Madura, the Nartinal, the Aga-nanuru and the Kurrum-togai each of four hundred love poems, the Aingurinuru of five hundred short poems and the Patitru-pattu or “Ten Tens” which in its present form contains eighty poems eulogizing eight Chera (Kerala) monarchs, are the other anthologies that have come down to us.
The total number of poems in the eight anthologies is 2352 and the total number of poets who contributed them is 535.
Some of the poets may have more than one name and consequently the number we are able to count closely agrees with the traditional number 449.
The traditional accounts conveyed to us by the commentators of medieval times state that the lost Sangam, the Literary Academy at Madura, lasted for a period of one thousand eight hun dred and fifty years, during the reign of forty-nine Pandya Kings and sets its seal of approval on the compositions of four hundred and forty nine poets.
The chronology of the early Tamils has not reached such a finality as to enable us to make unassailable decisions.
But from what we can gather from internal evidence and from the testimony of early Greek and Roman writers, such as Pliny (78 A.D.) Ptolemy (140 A.D.) and the author of the Periphus (70 A.D.) we can safely conclude that the last of the Cheras, Cholas and Panryas referred to in the Sangam works ruled over South India some time about the end of the second century A.D. If we accept the traditional account regarding the duration of the Literary Academy at Madura, we shall have to fix its beginnings in the sixteenth century B.C. If the date of the Mahabharata war is taken to be 1400 B.C. and if we accept the testimony of the great epic regarding the political and social connections between North and South India at the time of the war, we shall find that there is nothing improbable in holding the view that about a millenium and half before the Christian era, South India was suffi ciently advanced to possess a Literary Academy.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (50)
வடம நெடுந்தத்தனார் (179)
உ.வே.சா: வடநெடுந்தத்தனார் எனவும் பாடம் உண்டு.
+ ஒளவை: வடநெடுத்தத்தனார் வடநாட்டினின்றும் தென் நாட்டில் குடிபுகுந்த பழங்குடியிற் றோன்றியது பற்றி நெடுந்தத்தனார் வடநெடுந்தத்தனார் என்று கூறப்படுகிறார்.
வடம வண்ணக்கன் தாமோதரனார் (172)
உ.வே.சா: வண்ணக்கன் நாணயப் பரிசோதகர்.
இப்பொருள் நீலகேசி உரையில் கண்டது; நோட்டக்காரன் என்னும் பெயர் இப்பொருளில் இக்காலத்தில் வழங்கப்படுகிறது.
இவர் வடதிசையிலிருந்து வந்தவராகக் கருதப்படுகிறார்.
=ஒளவை: தாமோதரனார் வடநாட்டினின்றும் தமிழ்நாட்டில் குடியேறிய வடமர்குடியிற்றோன்றி வண்ணக்கர் தொழில் மேற்கொண்டிருந்தவர்.
செந்தமிழ்ப் புலமை நலமும் சிறந்து சீரிய செய்யுள் செய்த சிறப்பால் சான்றோர் தொகையுள் ஒருவராயினார்.
வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் (125)
+ஔவை: பெருஞ்சாத்தனார் வடநாட்டிலிருந்து தமிழகத்தில் குடியேறிய பழங்குடி மக்களுள் ஒருவர்.
அக்குடியினரை வடமர் என்பது வழக்கு.
இது இப்போழ்தும் பார்ப்பனரிடையே வழங்குகிறது.
பொன்னின் நோட்டம் பார்ப்பது இவரது தொழில் பற்றி இவர் “வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்” எனப்படுவாராயினர்.
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் என்பார் ஒருவர் உளர்.
அவர் வேறு, இவர் வேறு. இவரையும் பேரிசாத்தனாராகக் கொள்வாருமுளர்.
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் (198)
ஒளவை: வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் அகப்பாட்டுப் பல பாடிய சான்றோர் ஆவர்.
குமரனார் போல அத்துணைப் புலமை படைத்தவர் அல்லர் எனினும், தம் கருத்தை நயமான முறையில் வெளிப்படுத்தும் திறமை உடையவர்.
பொன் நோட்டம் பார்க்கும் தொழிலாளர்களை வடமவண்ணக்கன் என்ற சிறப்பு இனிதுகாட்டுகிறது.
எனினும் இவர் வழங்கும் குறிப்பு மொழிகள் நல்ல சான்று கூறி வற்புறுத்துகின்றன.
வடமோதங்கிழார் (260)
ஒளவை: வடமோதம் என்பது தொண்டை நாட்டில் உள்ள ஓர் ஊர்.
சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீ காளத்தி திருத்தணிகை வட்டங்களில் உள்ள மோதகம் என்னும் ஊர் பண்டை நாளில் மோதம் என இருந்து
இந்நாளில் மோதகம் என அரசியல் ஏடுகளில் வழங்குகிறது.
மதுரை மாவட்டத்திலும் மோதம் என்ற பெயரியதோர் ஊர் இருந்தமையின் தொண்டை நாட்டின் வடபால் இருந்த மோதம் ‘வட மோதம்’ என வழங்கியது.
வன்பரணர் (148)
உ.வே.சா: வன்பரணர்,
நெடுங்கழுத்துப் பரணர் என்று வேறு புலவர் உளராதலின் இவர் பெயருக்கு முன், வன்மை என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது.
இவருடைய செய்யுள் சிறந்த பொருள்நயம் சிறந்தது.
விரிச்சியூர் நன்னாகனார் (292)
ஒளவை: விரிச்சியூர் பாண்டி நாட்டில் உள்ள ஊர். வேந்தன் பொருட்டு விரிச்சி நின்று கூறியது.
அக்கூறியவாறே வேந்தற்கு வேண்டும் பயனை நல்கிற்றாக, அதனால் இவ்வூர் விரிச்சி நின்றவளுக்கு வழங்கப்பட்டதாதல் வேண்டும்.
அதனால் இவ்வூர் விரிச்சியூர் எனப்படுவதாயிற்று.
கணியூர், மருத்துவக்குடி, பிரமதேயம் முதலிய ஊர்கள் இவ்விருச்சியூர் போலப் பெயர் எய்தினவாகும்.
இவ்வூர் இடைக்காலத்திலே பெரிச்சியூர் என (A.R.No..66/ 1924) மருவி வழங்கலாயிற்று.
விரியூர் நக்கனார் (332)
உ.வே.சா.: சிவபிரானுடைய திருநாமமாகிய நக்கனார் என்பது இவருக்கு இடப் பட்டது போலும்.
+=ஒளவை: விரியூர் சேரநாட்டு வள்ளுவர் நாட்டில் உள்ளதோர் ஊர்.
இப்போது மலையாள சில்லாவில் இவ்வள்ளுவநாடு ஒரு தாலுகாவாக உள்ளது.
வீரை வெளியனார் (320)
உ.வே.சா.: வீரை வெளி என்பது ஓர் ஊர்.
x+ஒளவை: வீரை என்பது இவரது ஊர்.
வெளியன் என்பது இவரது பெயர். இந்த ஊர் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள நாட்டைச் சேர்ந்தது.
இது புதுச்சேரி வீராம்பட்டினம் என இப்போது வழங்குகிறது.
அகநானூற்றில் காணப்படும் சான்றோருள் ஒருவரான வீரை வெளியனார் இவருடைய மகன் ஆவார்.
வெள்ளெருக்கிலையார் (233)
ஒளவை: இப்பாட்டில் வெள்ளெருக்கின் இலையைச் சிறப்பித்துப் பாடியதனால் இவருக்கு இப்பெயர் எய்திற்று வேண்டும்.
வெள்ளை மாளர் (296)
ஒளவை: அச்சுப்படியில் வெள்ளை மாளர் என்று காணப்படுகிறது.
இப்பெயர் வெள்ளமாறனார் எனக் கொள்ளக் கிடக்கின்றது.
இவரைப் பற்றிய குறிப்பு வேறு எதுவும் இல்லை.
உ.வே.சா. அவர்கள் இவர் பாடிய “ஏறாண் முல்லைத்துறை” மிக்க பொருள் நயமுடையதென்ற ஒரு கருத்தையே இவரைப் பற்றிக் குறித்துள்ளார்.
வேம்பற்றூர்க் குமரனார் (317)
உ.வே.சா.: வேம்பற்றூர் என்பது மதுரைக்குக் கிழக்கே உள்ள ஓர் ஊர்,
வேம்பத்தூர் என இக்காலத்தே வழங்கும் குலசேகர சதுர்வேதிமங்கலம் என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு எனச் சிலாசாசனத்தால் தெரிகிறது.
கடைச்சங்கப் புலவர் காலம் தொடங்கி இன்று வரை அந்தணர்களே தமிழ்ப் புலவர்களாக இவ்வூரில் விளங்கியிருத்தலாலும் பெயராலும் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்.
+ஒளவை: வேம்பத்தூர் என்ற பெயருடைய ஊர்கள் பல சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் உள்ளன.
இக் குமரனார் பாண்டிநாட்டு வேம்பற்றூரினர் எனத் துணிந்துரைப்பாரும் உளர்.
வேம்பத்தூர் சிறந்தது பற்றி இவர் வேம்பற்றூர்க் குமரனார் என வழங்கப்படுவார்.
தஞ்சை மாநாட்டில் உள்ள திருமங்கலக்குடி அருகே வேம்பத்தூர் என ஊர் ஒன்றும் உள்ளது எனக் கல்வெட்டு (ARNo.224/1927) கூறுகிறது.
சிதைந்து இருப்பதால் பொருள் நலம் இனிதாகக் காண்டற்கு அரிதாகிறது.
பிற்சேர்க்கை-2
செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள். த. வே. உமாமகேசுவரனார், பி.ஏ.,பி.எல்,
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய நாள் தொட்டு தாம் மறையும் வரை 1941இல் அதன் தன்னேரில்லாத் தலைவராக இருந்தவர்.
நீதிக்கட்சி தோன்றிய நாளிலிருந்து தஞ்சை மாவட்டத்தில் அதன் தலைவர்களாக சர். ஏ.டி. பன்னீர்செல்வம், தமிழவேள் உமாமகேசுவரனார் ஆகியோர் வலம் வந்தனர்.
ஒரே காலத்தில் முன்னவர் தஞ்சை மாவட்ட வாரியத்துக்கும், பின்னவர் தஞ்சை வட்ட வாரியத்திற்கும் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பெற்று அரும்பணியாற்றினர்.
மக்களால் தஞ்சை வட்ட வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் உமாமகேசுவரனார்.
12 ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றினார்.
அவர் ஆட்சிக்காலத்தில் தஞ்சை மாவட்ட தமிழுக்கும் தமிழர்களுக்கும் பொற்காலம் என்று போற்றுவர்.
நாற்பது கல்வி நிலையங்கள் இருந்த தஞ்சை வட்டத்தில், 1920ஆம் ஆண்டு சென்னை தொடக்கக் கல்விச் சட்டத்தைப் பயன்படுத்தி 170 பள்ளிகள் தொடங்க வகை செய்தார்.
தாறுமாறாக நடைபெற்று வந்த தேர்வு முறையை மாற்றி, பள்ளியிறுதி வகுப்பிற்குப் பொதுத் தேர்வை அறிமுகப்படுத்தி ஒழுங்குபடுத்தினார்.
அதனால் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிக்கலின்றி உயர்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேர முடிந்தது.
தஞ்சை மன்னர் சரபோசி அறக்கட்டளை வழியே நடத்தப்பெற்ற ஒரத்தநாடு, அரசர்மடம் என்ற ஊர்களிலிருந்த உயர்நிலைப் பள்ளி இலவச உணவு விடுதிகளில் பெரும்பாலும் ஓரின (பார்ப்பன) மாணவர்களே இருந்த நிலையை மாற்றி எல்லா இன மக்களும் தங்கிக் கல்வி பயில ஏற்பாடு செய்தார்.
அதேபோன்று, சமற்கிருதம் மட்டுமே கற்பித்துவந்த திருவையாற்றுச் சமற்கிருதக் கல்லூரியை மாவட்டக் கழகத் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்ச்செல்வத்தின் துணையோடு, மன்னர் சரபோசி சமற்கிருத-தமிழ்க் கல்லூரி எனப் பெயரை மாற்றி தமிழுக்கும் வழியமைத்ததுடன், ஆதிதிராவிட மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களும் தங்கும் விடுதியாகவும், பயிலும் கல்லூரியாகவும் மாற்றியமைத்தார்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment