POST: 2022-09-06T10:54:44+05:30

தியாகி இராஜவேலு நூல் வெளியீட்டு விழா

தினமலர் – சென்னை பாதிப்பு – 2.9,2022 – பக்கம் எண் : 4

தியாகி இராஜவேலு நூல் வெளியீட்டு விழா

செப். 2

தியாகி ராஜவேலுவின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் வெளியிட்டார்.

எழுத்தாளரும், சுதந்திர போராட்ட தியாகியு மான கு.ராஜவேலுவின் வாழ்க்கை வரலாற்றை, ‘ பான் பியர்லெஸ் நாட்ப்ரீ’ ‘ என்ற தலைப்பில், அவரது பேத்தி மீனா பாலாஜி எழுதினார்.

இந்த நுால் வெளியீட்டு விழா, ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க., மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் பங்கேற்று, நுாலை வெளியிட்டு பேசியதாவது :

சுதந்திர போராட்ட தியாகி ராஜவேலுவின் வாழ்க்கை குறித்து, அவரது பேத்தி மிக அருமையாக எழுதியுள்ளார்.

இவர், தலைமை செயலகத்தில்,
1968 – 75 வரை மொழிபெயர்ப்பு துறையின் இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

முன்னாள் முதல்வர் காமராஜருக்கு மூன்று கண்களில் ஒருவராக இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன், அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

அவரது பேத்தி, மீனா பாலாஜி வெளிநாட்டில் படித்திருந்தாலும், தாத்தாவின் தமிழ் வரலாற்றை சேகரித்து எழுதியது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, எழுத்தாளர் மீனா பாலாஜி, தன் தாத்தாவின் வரலாற்று நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தார்.

பின், தியாகி கு.ராஜவேலுவின் நினைவு அறக்கட்டளையை அவரது மகள் டாக்டர் குழந்தை கஸ்துாரி துவக்கி வைத்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் , திரு.வி.க., மேல்நிலைப் பள்ளி ஆட்சிக் குழு தலைவர் பேராசிரியர் வேதகிரி சண்முகசுந்தரம், செயலர் பி.எஸ்.திருவதனன், தலைமை ஆசிரியர் ஜான் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

தினச்செய்தி – 3 9 2022 – பக்கம் எண் : 9

செய்தி துளிகள்…

சென்னையில் தியாகி இராஜவேலு நூல் வெளியீட்டு விழா

சென்னை செப். 3

தியாகி ராஜவேலுவின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் வெளியிட்டார்.

எழுத்தாளரும், சுதந்திர போராட்ட தியாகியுமான கு.ராஜவேலுவின் வாழ்க்கை வரலாற்றை , ‘ ” பான் பியர்லெஸ் நாட்ப்ரீ ” என்ற தலைப்பில், அவரது பேத்தி மீனா பாலாஜி எழுதினார்.

இந்த நூல் வெளியீட்டு விழா, ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் பங்கேற்று, நுாலை வெளியிட்டு பேசியதாவது :

சுதந்திர போராட்ட தியாகி ராஜவேலுவின் வாழ்க்கை குறித்து, அவரது பேத்தி மிக அருமையாக எழுதியுள்ளார்.

இவர், தலைமை செயலகத்தில்,
1968 – 75 வரை மொழிபெயர்ப்பு துறையின் இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

முன்னாள் முதல்வர் காமராஜருக்கு மூன்று கண்களில் ஒருவராக இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன், அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

அவரது பேத்தி, மீனா பாலாஜி வெளிநாட்டில் படித்திருந்தாலும், தாத்தாவின் தமிழ் வரலாற்றை சேகரித்து எழுதியது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, எழுத்தாளர் மீனா பாலாஜி, தன் தாத்தாவின் வரலாற்று நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தார்.

பின், தியாகி கு.ராஜவேலுவின் நினைவு அறக்கட்டளையை அவரது மகள் டாக்டர் குழந்தை கஸ்துாரி துவக்கி வைத்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் , திரு.வி.க., மேல்நிலைப் பள்ளி ஆட்சிக் குழு தலைவர் பேராசிரியர் வேதகிரி சண்முகசுந்தரம், செயலர் பி.எஸ்.திருவதனன், தலைமை ஆசிரியர் ஜான் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

செய்தி வெளியீடு

தேசியத் தமிழ்த் திலகம் கு. இராஜவேலு நினைவு அறக்கட்டளைத் தொடக்க விழா!

மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு
ஆங்கில நூல் வெளியீடு

சென்னை, செனாய் நகரில் உள்ள திரு. வி. க. மேனிலைப் பள்ளியில் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தமிழ் மூதறிஞர்
திரு. கு. இராஜவேலு அவர்களின் நினைவு அறக்கட்டளை தொடக்க விழா! மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு ஆங்கில நூலான ’BORN FEARLESS NOT FREE’ வெளியீட்டு விழா

01.09.2022 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது.

இவ்விழாவில், எழுத்தாளர் திரு. கு. இராஜவேலுவின் பெயர்த்தி அமெரிக்காவில் வாழும் திருமதி மீனா பாலாஜி, கு. இராஜவேலுவின் வாழ்க்கை வரலாற்றினை ஆங்கிலத்தில் எழுதிய நூலை
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் வெளியிட முதல் பிரதியை பேராசிரியர் டாக்டர் வேதகிரி சண்முகசுந்தரம் பெற்றுக் கொண்டார்.

அவ்வண்ணமே, கு. இராஜவேலு நினைவு அறக்கட்டளையை அன்னாரின் திருமகள் டாக்டர் திருமதி குழந்தை கஸ்தூரி தொடக்கி வைத்தார்.

டாக்டர் ஆர். திருமாவளவன், மற்றும் பள்ளிச் செயலர்
திரு. பி. எஸ். திருவதனன், தலைமையாசிரியர் திரு. கே. ஜான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நூல் வெளியிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ”

பெருந்தலைவர் காமராஜருக்கு மூன்று கண்கள் உண்டு.

ஒன்று பெருந்தகை குழந்தைவேலு மற்றொன்று அறிஞர் கு. இராஜவேலு அடுத்தது தலைமைச் செயலாளராக விளங்கிய திரவியம் என்பார்கள்.

அறிஞர் கு. இராஜவேலு தலை நிமிர்வோடு தன் ஆற்றல் முழுவதும் நிரம்பிய அடக்கத்தோடு, சிவந்த மேனியும், செம்மாந்த தோற்றமும், இருகை வீசி ஏறுபோல் நடந்து தன் சீருந்தைத் தானே செலுத்தும் பெருமிதம் கொண்டவர் ஆவார்.

அண்ணல் கு. இராஜவேலு அவர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள மொழிபெயர்ப்புத் துறையில் முதல் இயக்குநராக 1968 முதல் 1975 வரை பணியாற்றியவர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அறிஞர்
கு. இராஜவேலு தஞ்சாவூர் சிறையில் ஓராண்டும் அலிப்புரம் சிறையில் ஓராண்டும் அரசியல் கைதியாக அல்லலுற்றார்.

14 வயதிலேயே சிறுகதைகள் எழுதிய சிந்தனையாளர், அண்ணல் காந்தியடிகள், நேரு பெருமகனார், ஜெயப்பிரகாஷ் நாராயணன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதலிய தேசியத் தலைவர்களைக் கண்டு உரையாடிய வாய்ப்பினால் முழு நேர அரசியல் வாழ்க்கையில் 11 ஆண்டுகள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பெருந்தகை கு. இராஜவேலு எழுதிய ’காதல் தூங்குகிறது’, ‘கொடை வளம்’, ’சத்தியச் சுடர்கள்’, ’வைகறை வான்மீன்கள்’, ’வள்ளல் பாரி’, ‘அழகு ஆடுகிறது’, ’வானவீதி’, ’காந்த முள்’, ’மகிழம்பூ’, ’தேயாத நிறை நிலை’, ’இடிந்த கோபுரம்’ ஆகிய கருவூலங்கள் ஈடற்றவையாகும்.

நடிகர் திலகம் நடித்த இராஜபக்தி (1960) திரைப்படத்திற்கும் உரையாடல் வரைந்தது குறிப்பிடத்தக்கது.

அன்னார் தனது 101 வயது நிறைவில்தான் தன் உயிர் நீத்தார்.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற இரு மாணவச் செல்வங்களுக்கும் அறக்கட்டளை வாயிலாக பரிசுத் தொகை வழங்கியதைப் பாராட்டுகிறேன்.

நூலறிந்தப் புலவர் நுண்மதிவாணர் அறிஞர் கு. இராஜவேலு புகழை என்றைக்கும் போற்றுவோம்.”

என்று தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *