POST: 2022-07-17T10:53:37+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 118

‘ஆனைமங்கலச் செப்பேட்டு வரலாறு’

முனைவர் ஔவை அருள்,

1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-

தென்னாப்பிரிக்க மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலைப் பொருளாளர் திரு. நடேசன் உடையார் அவர்களின் வாழ்த்துச் செய்தி தொடர்ச்சி…

“Inspired by my late parents who were very community-conscious and had a burning desire to preserve and propagate Tamil Culture, I joined the Merebank Tamil School Society in the early forties and since then have been with them, happily serving to my heart’s content.

I found to my great satisfaction that I had joined a band of men who were thoroughly dedicated to the cause they had undertaken.

Our senior officials were men of and foresight and were imbued with idealism.

Therefore our leadership was strong, inspiring and effective.

Similar to so many voluntary cultural organisations in our community our Society too, has had an history of uphill struggle.

We experienced our share of trials and tribulations.

There were many difficulties. There were many problems.

But happily we also recorded many achievements and successes along the way as well.

We thank our core of benefactors, the many stalwarts, supporters, many encouraging and helpful families, the many donors and the community of Merebank for sustaining us morally and spiritually.

We had an ideal to serve and a goal to reach and so we kept working diligently towards those.

All along we kept in mind that the needs of the community must be best served.

Our respected chairman Mr M.R. Moodley, to whom I must pay tribute, was a model leader whose personal interest did not intrude on his Society’s work.

He displayed unselfishness, total dedication, honesty of purpose and a deep feeling for community advancement.

My association with the Society has given me rich and rewarding satisfaction and a sense of having served a worthy cause.

I do hope to continue with joy, in the best way I can and serve as long as God spares me.

I end by thanking the many wonderful people whose courtesy, help, encouragement and co operation I enjoy. God bless.”

மாண்புமிகு டர்பன் மேயர் திரு. ஸ்டான்லி எச். லேங்க் அவர்களின் வாழ்த்துச் செய்தி:-

“It is indeed a pleasure for me as Mayor of the City to offer on behalf of all our citizens’ sincere congratulations to the Merebank Tamil School Society on the attainment of its fiftieth anniversary.

Any society which has as its main object the education and cultural advancement of the community is to be encouraged in the work which it does.

I understand that the first Tamil education school was built in 1943 on land which was donated by the late Mr and Mrs S.T. Nadasen Odayar.

Over the past fifty years many people have contributed to the Society’s outstanding work, and I place on record the city’s sincere appreciation of all that they have done for so many thousands of people.

The present Merebank Tamil School is a permanent and vital part of the Society’s activities, and in placing on record the city’s appreciation I take this opportunity of wishing all concerned every success in their future endeavours.”
——————————-

பேராசிரியர் கு. சிவமணியின்

‘ஔவையும் புலமையும்’ – (42)

நாட்டு வரலாற்று அறிவு தேவை
இலக்கியங்கள் யாவும் பலவும் தாம் தோன்றிய காலத்து மக்கட் சமுதாயத்தின் சூழ்நிலையை எடுத்துக் காட்டும் இயல்பின என்பது அறிஞர் உலகம் நன்கறிந்த செய்தி.

அந்நெறியில் சைவ இலக்கியங்கள் தாம் பிறந்த காலத்து வாழ்ந்த சைவ மக்களின் சமய உணர்வு ஒழுக்கங்களைத் தம்மைப் பயில்வோருக்கு உணர்த்தும் கருவூலங்கள் ஆகும்.

ஆயினும் இலக்கியங்களின் தோற்றம், பேணற்பாடு முதலிய கூறுகளை உணர்தற்கு அவை தோன்றிய காலத்து நாட்டு வரலாற்று அறிவு பெரும் துணையாகும்.

அக்காலத்தில் நாட்டில் நிலவிய அரசியல் பொருளியல் வாணிபம் தொழில் முதலியவற்றை உரைக்கும் நாட்டுப் பொது வரலாறு தெரிந்திருப்பது பெரிதும் நன்று.

நம் தமிழ்நாட்டின் தவக் குறைவாலும் தமிழ் மக்களின் ஊக்கம் இன்மையாலும் அத்தகைய பொது வரலாறு ஒன்று இதுகாறும் எழுதப்படவில்லை.

சங்ககாலச் சேரர் வரலாறு,
சங்ககாலச் சோழர், பாண்டியர் வரலாற்றை அறியச் சான்றுகள் கிடைத்ததைப் போல், சேரர் வரலாற்றுக்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

கிடைத்த சான்றுகளின் நம்பகத்தன்மயும் கேள்விக்குரியதாயிற்று.

ஆதலால், சேரர் வரலாறு தெளிவில்லாமல் சற்றே மங்கிக் கிடந்தது.

அதனால் அரிதின் முயன்று பெரும்பாடுபட்டு சான்றுகளை தேடியலைந்து கண்டுபிடித்து, பண்டை நாளைச் சேர மன்னர் வரலாறு என்னும் தமது அரிய நூல் வழியே உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்.

சங்ககாலச் சேரர் இலக்கியங்களை யான் ஆராயப்பட்ட போது சேர நாட்டைப் பற்றிய குறிப்புக்களைத் தேடித் தொகுக்கும் கடமை உண்டாயிற்று.

அக்காலை; மேனாட்டறிஞரான வில்லியம் லோகன் எழுதியனவும், நாட்டவரான திரு. நாகமையர், திரு. கே.பி. பத்மநாப மேனன், திரு. கே.ஜி. சேசையர், திரு. சி. கோபாலன் நாயர் முதலியோர் எழுதியுள்ள நூல்களும், திருவாங்கூர், கொச்சி, குடகு, கன்னடம் ஆகிய பகுதிகளைப் பற்றிய அரசியல் வெளியீடுகளும் பெருந்துணை செய்தன.

பழையங்காடி, உடுப்பி, ஹொன்னவார், கோழிக்கோடு, கண்ணனூர், பெல்காம் முதலிய ஊர்களில் வாழ்ந்து வரும் நண்பர்கள் பலர் தெரிவித்த குறிப்புக்களும் எனக்கு மிக்க ஊக்கம் தந்தன.

அதனால் சேரர் வரலாற்றை காண்பதற்கெழுந்த வேட்கை உறுதிப்படுவதாயிற்று.

சேரநாடு கேரள நாடாயின பின் சேர மக்கள் வாழ்ந்த ஊர்களும் அவர்களிடையே நிலவிய ஒழுக்க நெறிகளும் மறைந்து ஒடுங்கினவாயினும், பழங்கால இலக்கியக் கண்கொண்டு நேரில் சென்று காண்போர்க்கு புலனாகாமற் போகவில்லை.”

இந்நூலில் ஒளவை சுட்டிய மேற்கோள்கள் வருமாறு:

235 பக்கங்களில் 19 தலைப்புக்கள் கொண்ட இந்த நூலை எழுதுதற்காக

இலக்கிய / இலக்கண / சமய வரலாற்றுத் தமிழ் நூல்கள் 25;

ரிக்வேதம், தைத்திரிய ,ஆரண்யகம் வியாச பாரதம், இராமாயணம் முதலிய சமற்கிருத நூல்கள் 4;

கல்வெட்டு, செப்பேடுகள் 8;

வரலாற்று / ஆராய்ச்சி ஆங்கில நூல்கள் 25, ஆக 62 ஆதாரங்களைத் திரட்டித், தெளிந்து, தேர்ந்து, நூற்செய்திகளின் உண்மைத் தன்மையை 449 அடிக்குறிப்புக்கள் வழியே எடுத்துக்காட்டித் தம் ஒரு வரலாற்று வல்லுநர் என்பதை நிறுவியிருக்கிறார்கள்.

“இதுவரையில் இருள் படர்ந்திருந்த சங்ககாலச் சேரர் வரலாறு இவ்வரலாற்று நூலால் விளக்கமடையும் என்று கூறுதல் பொருந்தும்” என்று
பேராசிரியர் மா. இராசமாணிக்கனார் அணிந்துரையில் கூறுகின்றார்.

அணிந்துரையாளரும் ஒருவரலாற்றுத் தமிழ்ப் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சைவ இலக்கிய வரலாற்று நூல்:

கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு முடிய அமைந்த காலம் சிறந்த செந்தமிழ் நூல்களாகிய சைவஇலக்கியங்கள் பற்றிய செய்திகள் தென்னிந்திய கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பிற நாட்டார் யாத்திரைக் குறிப்புக்கள் முதலிய வரலாற்றுச் சான்றுகள் கொண்டு தெளிவாக விளக்கப் பெற்றுள்ளது.

இந்நூலின் சிறப்புக் குறித்து துணைவேந்தர் தி.மு. நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் “தமது புலமை நலம் அனைத்தும் தமிழ்நாட்டுக்குப் பயன்படும் முறையில் இவ் இலக்கிய வரலாற்றினை இனிமையும் தெளிவும் பொருந்திய செந்தமிழ் நடையில் எழுதியுள்ளார்கள்” என வரைந்துள்ளார்.

வரலாற்றுக் காட்சிகள் நூல்தோன்றக் காரணம்

நாட்டு வரலாற்று அறிவு சென்ற காலங்களில் மக்கள் முன்னேற்றத்துக்கு இடையூறு செய்த தடைகளை உணர்ந்து எதிர்காலத்தில் அவை மிகவும் தலைகாட்டாமல் தற்காத்துக் கொள்வதற்குத் துணைபுரிகிறது.

இந்த உண்மையை அறிந்த மேனாட்டு வரலாற்று அறிஞர்கள் வரலாற்றுப் புகழ் படைத்தவர் சிலருடைய வாழ்வில் சிறப்பாகக் குறிக்கத்தக்க நிகழ்ச்சிகளைத் தேர்ந்து சிறு சிறு கதை வடிவில் தந்து கல்வி பயிலும் மாணவர்களின் திறமை உள்ளங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

அவர்களுடைய இந்த நன்முயற்சி பெரும் பயனை அளித்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து நமது நாட்டு வரலாற்றில் சிறந்து விளங்கிய வேந்தர் சிலருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளில் சிலவற்றைச் சேர்ந்து சிறுகதை வடிவில் கூறுவது கருத்தாகக் கொண்டு வரலாற்றுக் காட்சிகள் என்ற தலைப்பில் இந்த நூல் தோன்றுகிறது.

வரலாற்றுச் செய்திகள் சில:

சோழன் கரிகாலன் பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனாருக்குப் பரிசளித்த பதினாறு கால் மண்டபம் பகுதி நீங்கலாக அனைத்தையும் பாண்டியன் இடித்துத் தகர்த்தான்.

திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் நாழிக் கோட்டான் வாசலுக்கு வலப்பக்கச் சுவரில் காணப்படும் கல்வெட்டு ஒன்று (ARNo.197 1938 39)
பாண்டி நாட்டுக் கப்பலூர் சோழர் ஆட்சியில் உலகளந்த சோழ நல்லூர் எனக் குறிப்பிடுகிறது;

கல்வெட்டு புத்தூர் கூற்றத்து உலகளந்த சோழ நல்லூர் கப்பலூர் (AR No. 925) எனக் கூறுகிறது.

இன்றைய பூந்தமல்லியின் பழைய பெயர் பூவிருந்தவல்லி; பழம்பெயர் பூந்தண்மலி;

நெடுஞ்செழியன் கல்வெட்டு அவன் பெயரால் அமைந்த திருமால் கோவிலில் உள்ளது.

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர்க் கோட்டத்துப் பூந்தண்மலியில் நெடுஞ்செழியவிண்ணகர் இருந்த தேவர் (ARNo.302/1938-39)
மாமன்னன் இராசராசன் நாகை புத்த விகாரைக்குப் பள்ளிச்சந்தமாக இறையிலி நிலம் அளித்ததை ஆனைமங்கலச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

அதற்குப் பின் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை ஒளவை அவர்கள் எடுத்துக் கூறும் போதுதான் அதனுடைய அழிவு நமக்குப் புரிகிறது.

முதல் குலோத்துங்கனிடம் புத்த விகாரையை மீட்டளிக்குமாறு புத்த சங்கத்தினர் வேண்டுகோள் விடுகின்றார்கள்.

அதற்கிணங்கத் தாமிர சாசனம் பண்ணிக் கொடுக்க ஆணையிடுகிறான்.

இச்சூழலில் செப்பேடு எப்படி எழுதப்பட்டது என்பதை ஒளவை விளக்குகின்றார்.

மேலும் விகாரை சீரழிவுற்றதைக் கண்ணுற்ற எலியட் என்பார் அதைப்பற்றி விவரிக்கின்றார்.

புதுவை ஜேசூட் பாதிரி 1859-இல்இங்குக் குடியேறி விகாரையை இடிக்க விண்ணப்பம் கொடுத்தார்;

ஆனால் இடிக்கப்படக்கவில்லை;

ஆளுநர் வேலியிட்டு நிழற்படம் எடுப்பித்தார் (Epigrapica Indica Vol.xzx9/213; படம் உள்ளது)

. 1867ல் பாதிரியார் மீண்டும் முயற்சி செய்கின்றார்;

அதற்குப் பொறிஞர் மறுப்புக் குறிப்பு எழுதவே முயற்சி வெற்றி பெறவில்லை.

மீண்டும் செயின்ட் ஜோசப் கல்லூரித் தலைவர் பெருமுயற்சி செய்தார்;

அவருடைய செல்வாக்கினால் சென்னை ஆளுநர் அதை இடிக்க இசைவு தந்தார்; புத்த விகார் தரைமட்டமானது.

சம்புவராயனின் தமிழ்ப் படையும் இலங்கைப் படையும் மோதின;

குரு ஞான சிவ தேவரை அவன் வேண்டியதால், அவர் 28 நாள் அகோர பூஜை நடத்தவே தமிழ்ப் படை வெற்றி பெற்றது.

அவன் ஆர்ப்பாக்கம் ஊரைக் குருதேவர்க்கு இறையிலியாகத் தந்தான் (South Indian Ephigraphica Indica, Madras 20/ 1799)

பெட்றோனியஸ் குறிப்பு:

சேரர் துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்த பொருள்களுக்காக ஆண்டுதோறும் 4,86,679 பவுன் யவனர்களால் செலுத்தப்பட்டது.

தாலமி, பெரிப்ளூஸ், பிளினி போன்ற பல குறிப்புக்களைச் சுட்டிக் காட்டுதல்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *