POST: 2022-06-04T09:52:50+05:30

முனைவர் ந. அருள்.இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை அவர்களை வரவேற்கும் கவிதை.(4.6.2022)

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அன்பை,
பெற்றவ ரிவரெனும் பெருமித செய்தி,
முத்திரை பதிப்பார் வகிக்கும் துறையில்,
முனைவர் இவர்பணி வாழிய வென்போம்.

ஒளவை துரைசா மியெனும் அறிஞர்,
அவர்பின் ஒளவை
நடரா சனவர்,
செவ்வியல் மொழியில்
வல்லமை மிகுந்த,
தலைமுறை தொடர்வது
பெரிதினும் பெரிதாம்.

அருளா ளரிவர்
தமிழக அரசால்,
தமிழ்வளர்ச் சித்துறை
இயக்குநராக,
மரபும் புதிதும்
இணைக்கும் வண்ணம்,
சான்றாய் நின்றிட
அரும்பணி புரிவார்.

ஆங்கிலம் தமிழும்
கணினியும் ஆய்வும்,
அணியாய் அழகாய்த்
தொடர்வத னாலே,
பாங்குடன் பல்விதப்
பொறுப்பில் உயர்ந்து,
உலாவரும் பண்பில்
கவர்வார் நம்மை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *