அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 105
ஓங்கிய சிறப்பும் உலகியல் தெளிவும்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
‘தமிழ் நாடு’ இதழின் பதிப்பாசிரியர் கருமுத்து தியாகராஜர் பாராட்டுக்கடிதம் மட்டுமல்லாது, துணை ஆசிரியர் திரு. ஏழுமலையும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயினுல்லாவுதீனும் இணைந்து (01.06.1959) வழங்கிய பாராட்டுக் கடிதம்:-
“This is to certify that Shri D. Natarajan, S/o Professor Avvai S. Doraisamy Pillai, has served as Sub-Editor in our daily for a period of six months.
During the period, he had contributed number of interesting essays.
He had to leave the service in order to prosecute his further studies in Tamil literature Honours.
His behaviour and conduct were excellent.
He is a hard working young man and I wish him all success in his career.”
மதுரை தியாகராசர் கல்லூரி அறங்காவலர் திரு மாணிக்க வாசகம் (26.06.1961) வரைந்த பாராட்டுக் கடிதம்:-
“As his employer, I am happy to say that Mr. Avvai D. Natarajan is a polished young man from highly esteemed family.
The son of a distinguished Tamil scholar, Dr. Natarajan is a powerful orator and his extensive knowledge of Tamil language and literature has elicited praise from savants of the Tamil language such as Dr. M. Varatharajan and Professor S. Ilakkuvanar.
His originality in thought and expression has been noticed by scholars like Professor Dr. M. Rajamanickam and others.
His popularity with his students and staff in our college is a living testimony to his success as a teacher.
I have no hesitation whatsoever in recommending this outspoken young man for this scholarship.
Indeed, I feel that this opportunity would be a service not only to him but to south India itself”.
அரசுப் பணியில் எந்தையார் இணைவதற்கு முன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு, அவருடைய தீந்தமிழ் நாவன்மையின் பெரும்புகழால் தில்லி மாநகரத்தின் அகில இந்திய வானொலி நிலையத்தின் செய்தி அறிவிப்பாளராகப் பணி கிடைக்கப்பெற்றது.
குறுங்காலிகமாகத் தில்லி மாநகரில் அவர் பணியாற்றிய பொழுது, வானொலி நிலைய இயக்குநர் வாயிலாகக் கிடைக்கப் பெற்ற (07.06.1960) பாராட்டுச் சான்றிதழ்:-
“Shri Avvai D. Natarajan worked as a news reader and program announcer in the Tamil Unit of External Services Division from 06.02.1960 to 31.05.1960.”
மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் இலக்குவனாரின் (18.07.1961) பாராட்டுக் கடிதம்:-
“Sri D. Natajaran, B.A. (Hons), has been known to me for many years.
He has been a teacher for over 3 years and I have great pleasure in testifying to his excellence of character, amiable temper and exemplary conduct.
He is gifted with a powerful voice and his knowledge of Tamil extensive and profound.
He is an orator of repute, coming of a family of distinguished Tamil Scholar.
Sri. Natarajan is very popular among his students and is bound to have a bright future.
Sri Natarajan has registered himself for the degree of M.Litt., with the Madras University and I am sure it is within his easy reach.”
மதுரை தியாகராசர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் வரதாச்சாரி (05.09.1964) அன்று வரைந்த வாழ்த்து மடல்:-
“Mr. D. Natarajan M.A., has been working in Tamil Department for the past five years, teaching the P.U.C. and B.A. classes.
He has now secured the M.Litt. degree in Tamil Language and Literature.
Coming from a family of great Tamil scholars, he is sure to make his mark as a lecturer in Tamil.
He is an efficient teacher and effective speaker.
I have high regard for his personal character.”
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பூஞ்சையியல் மற்றும் தாவர நோயியல் உயராய்வு மையப் பேராசிரியர் முனைவர் சுப்பிரமணியன் அவர்கள் (08.02.1965) எழுதிய வாழ்த்துக் கடிதம்:-
“I have very genuine pleasure in writing a few lines on behalf of Shri D. Natarajan, M.A., M.Litt., Lecturer in Tamil, Thiyagaraja College, Madurai.
I have known to Shri Natarajan, for over Ten years, ever since he was a student of Tamil Honours class at Pachaiappa’s College, Madras.
He had always impressed me with his whole hearted devotion to Tamil language and Tamil culture.
His unbounded enthusiasm for Tamil has already made him an erudite teacher and refined speaker.
Shri. Natarajan is currently working for a Ph.D. degree of Madras University and I have no doubt that he will be able to complete all the requirements shortly.
Shri. Natarajan possesses pleasant manners and gentlemanly bearing.
I wish him very well.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (29)
விளக்கம்: புணரி – அலை; “குடகடல், வெண்டலைப் புணரி பின் மான்குளம் பலைக்கும் (புறம்.31) என வருதல் காண்க:
பிசிர் – சிறுதுளி, ‘வெண்டலைக் குரூஉப் பிசி ருடைய” (பதிற்.42) எனப் பிறாண்டும் வரும்.
“நளியிரும் பரப்பின் மாக்கடல்” எனக் கடலின் பெருமையும் பரப்பும் கூறுதலின், அத்தகைய கடல் துளங்குதற்கு ஏது கூறுவார்.
“வளிபாய்ந்தட்ட” என்றும், அதன் விளைவாக ‘”வரைமருள் புணரி வான் பிசிர் உடைய” என்றும் கூறினார்.
முகிற்கூட்டம் படிந்து முகத்தலால் குறைவதும், யாறுகளாலும், மழையாலும் புனல் வருதலால் மிகுவதுமின்றி, எஞ்ஞான்றும் நிறைந்திருத்தலின், ”கமஞ்சூல் மாக்கடல்” என்றார்.
கமஞ்சூல் – நிறைந்த நீர், சூல் போலறாற் சூலெனப்பட்ட தென்பர் பழையவுரைகாரர்.
மழை கொளக் குறையாது புனல் புகக் கரை பொருதி ரங்கும் முந்நீர்” (மதுரை.424) எனப் பிறரும் கூறுதல் காண்க. பிறர்க்குத் துன்பம் செய்தலையே யியல்பாகவுடையராதலின், “அணங்குடை யவுணர்” என்றார்.
சூரன் ஒம்பிய மாமரம், அவுணர் தம்முடனே யெதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரம் கொண்டிருந்து சாதித்தது” (முருகு. 56 – 60) பற்றி, அதனை அவ அவருக்கு ஏமமாகப் புணர்த்து ஒம்பினான் என வறிக. சூருடை முழுமுதல் என்றது தனக்கரணாக வுடைய மாவின் முழுமுதல் என்றவாறு; இனி, சூரவன்மாத் தான் ஒரு மாவாய் நின்றானென்று புராணமுண்டாயின், சூரனாதற் றன்மையையுடைய மாவின் முதலென்றவாறு பழைய வுரை.
செவ்வேளது கடுஞ்சினம் அவுணரது மாவின் முழுமுதல் தடிதற்குத் துணையாய் அவுணரல்லாத ஏனைய நல்லோர்க்கு நலம் பயந்தமையின், “பேரிசைக் கடுஞ்சின விறல் வேள்” என்று சிறப்பித்தார்.
“அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர், மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து, நல்லிசை செவ்வேற் சேஎய்” (முருகு.59-61) என நக்கீரனார் கூறுதல் காண்க.
முருகன் கடற்குட்புகுந்து, அவுணருடன் சூழவாழ்ந்த சூரவன்மாவை யழித்த செய்தியை நக்கீரனாரும் “பார்முதிர் பனிக்கடல் கலங்க வுள்புக்குச், சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” (முருகு.45-46) என்று கூறுதலாலுமறிக.
முருகன் பிணிமுகமென்னும் களிறூர்தலை முருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினிய ரெழுதிய உரையாலுமறிக.”
‘மாக்கடல் முன்னி முழுமுதல் தடிந்த விறல் வேள் களிறூர்ந் தாங்கு, யானை பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்த’ என இயைத்துக் கொள்க.” (ப.68)
இவ்விளக்கத்தில் ஒளவையவர்கள் மாக்கடல், கமஞ்சூல், அணங்குடை அவுணர், சூருடை முழுமுதல்’ முதலாய தொடர்களுக்குக் காரணக் காரியங்கள் கூறியும், ‘களிறு = பிணிமுகம் எனும்யானை’ எனப் பெயர்குறித்தும் நன்கு புரிய வைக்கின்றனர்;
தமது கூற்றுக்கு ஆதரவாகச் சங்க இலக்கியத்திலிருந்து ஆறு தரவுகளை இடஞ்சுட்டுகின்றனர்.
பழையவுரையில் இவை இல்லை.
பொருள்கோள்:
1) “கவிர்ததை சிலம்பிற் றுஞ்சும் கவரி
பரத்திலங் கருவியொடு நரந்தங் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்” (21-23)
பழையவுரை:
கவிர் ததை சிலம்பிற் துஞ்சுமென்றது ஆண்டு உறையும் ஆரியராணையானே முருக்கும் முள்ளுடை மரமும் ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா (திருக்குறள் 469). என்று சிறப்பிக்கப்பட்ட தன் மயிருக்கும் வருத்தம் செய்யாமையால், கவிர் செறிந்த சிலம்பின் கண்ணே இனிதாக உறங்குமென்றவாறு.
22- அருவியோடு நரந்தம்கனவுமென்றது, அவ்வாரியராணையானே பிற விலங்கானும் மக்களானும் வருத்தமின்றிப் பகற்காலத்துத் தான் நுகர்ந்த அருவியையும் நரந்தத்தையும் கனவிலும் காணுமென்றவாறு.
ஔவை உரை:
”முருக்க மரங்கள் செறிந்த மலை இடத்தே இரவில் உறங்கும் கவரி மான்கள், பகற்போதில் தாம் மேய்ந்த நரந்தம் புற்களையும் அவை வளர்த்திருக்கும் பரந்து விளங்கும் அருவிகளையும் கனவிற்கண்டு மகிழும்;
ஆரியர் நிறைந்து வாழும் பெரிய புகழை உடைய இமயம் தெற்கின்கண்ணுள்ள குமரியாகிய இவற்றுக்கு இடைப்பட்ட நாட்டிலுள்ள மன்னர்களுள் செருக்குற்று மீக்கூறும் மன்னர்களின் மறம் கெட்டழியுமாறு, வஞ்சியாது பொருது வென்று, மார்பிற் கிடக்கும் பசிய மாலை, ஓடையளவும் தாழ்ந்து அதனோடு விளங்கும் வெற்றியாலு யர்ந்த மருப்பினையுடைய குற்றமில்லாத யானையின் பொன்னரி மாலை யணிந்த பிடரின் மேல் ஏறியிருந்து சிறக்கும் நின்னுடைய, பலரும் புகழும் செல்வச் சிறப்பினை யாம் இனிது காண்கின்றோம், நீ வாழ்க என்றவாறு.”
ஆரியர்துவன்றிய என்பதற்கு ஆரியர் ஆணையானே எனப் பழைய உரையும் ஆரியர் நிறைந்து வாழும் என ஒளவையின் உரையும் அமைகின்றன. ‘
ஆரியர் = ஆரியமுனிவர்’ என்பர் உ.வே.சா.
(2) “மன்மீக் கூறுநர் மறந்தபக்கடந்தே” (25),
பழையவுரை:
25-மன், அரசன்; அரசென்றது போல அஃறினைப் பெயராக்கி அம்மன்களில் மீக்கூறுமெனக் கொள்க.
ஔவை விளக்கம்:
“இனி நெடுஞ்சேரலாதன் இமயம் வரை தன் புகழைப் பரப்பி ஆங்கே மறம் செருக்கிய ஆரிய மன்னரை வென்று மேம்பட்டானாதலின், “ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம் தென்னங் குமரியொடாயிடை, மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே” யென்றார். “ஆரிய ரலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்” (அகம் 366) என ஆசிரியர் பரணரும், “வலம்படு முரசிற் சேரலாதன் முந்நீ ரோட்டிக் கடம்பெறிந் திமயத்து, முன்னோர் மருள வணங்கு விற் பொறித்து” (அகம் 126) என ஆசிரியர் மாமூலனாரும் கூறுதல் காண்க.
இவ்விருவகை வெற்றிகளுள், இமயத்தில் விற்பொறித்து ஆரிய மன்னரை வென்று பெற்ற வெற்றி பழைமைத்தாயினமையின், அதனைக் குறிப்பாயுணர்த்தி, கடம்பர்பால் பெற்ற வெற்றியினை விரியக் கூறினாரென வறிக”.
அரசு என்பது உயர்திணைப் பொருண்மைக்கண் வந்த அஃறிணைச் சொல்லாதலின், அது போலவே, மன்னென்பதும் உயர்திணைப் பொருட்டாகிய “அஃறிணை பெயராக்கி” மீக்கூறுமென்பதனோடு முடிக்கவெனப் பழையவுரைகாரர் கூறினர்.
உயர்திணை மருங்கின் நிலையின வாயினும், அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்” (தொல்.சொல்.56) என்பது விதி.
பழையவுரை: (25) மறந்தபக்கடந்து, (14) முழங்கு பணைசெய்தவென மாறி முடிக்க; இங்ஙனம் மாறாது (19) எருத்த மேல்கொண்டென்னும் வினையோடு மாறி முடிப்பாருமுளர்”
ஒளவை: “மறந்தபக் கடந்து (21) முழங்கு பணை செய்த (14) என மாறிக் கூட்டுக.
இங்ஙனம் மாறாது எருத்தம் மேல்கொண்டு (19) என்னும் வினையோடு மாறி முடிப்பாருமுளர் என்பது பழையவுரை, ஆரிய மன்னரை மறந்தபக் கடந்த செய்திக்குப் பின்பே கடம்பெறிந்து முரசு செய்த செய்தி நிகழ்ந்தலின், எவ்வழி கூட்டினும் பொருள் நலம் குன்றாமை யறிக.”
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment