தமிழ் நாடக தொல்காப்பியர்
ஒளவை திக சண்முகம்
மணிவிழாவின் போது
26.4.1972
உரை வேந்தர் ஒளவை துரைசாமி வாழ்த்துப்பாடல்
இன்பம் – மன்னி – இலங்குக !
அவ்வை டி.கே. சண்முகத்துக்
அறுப தாண்டு நிறைவதென
எவ்வெம் மருங்கும் உளநண்பர்
எல்லாம் கூடி இயல்முறையில்
செவ்வை திகழும் மணிவிழாச்
செய்த லறிந்து
மகிழ்ந்த மனம்
இவ்வாழ்த் தினையோர் பாட்டுருவில்
இயற்று மிதனை ஏற்றிடுக.
இயலால் மொழிந்தின் னிசைபாடி
இயற்கை யான நடிப்பமைத்து
அயலார் ஆசை கொள நண்பர்
ஆயி னோர்தாம் அகம்மகிழ
வியலார் தமிழ்நாட் டோடு கடல்
வேலி கடந்து பிற நாட்டில்
முயலா வாழும் தமிழரினம்
முழுதும் களிக்கப் புகழ்நிறுத்தோய்.
அன்பால் வாழ்வு பெருக நலம்
அனைத்தும் உற்றுத் தமிழ்நாடு
மன்சீர் அரசும் இந்தியப்பேர்
மருவும் அரசும் செய்சிறப்பால்
நன்மை அவ்வை சண்முகனார்
நண்பர் சுற்றம் நயப்புமிக
இந்நாள் போல எந்நாளும்
இன்பம் மன்னி இலங்குகவே.

Add a Comment