ஒளிவீசிய மணியின்
( போட்டோ மணி ) மறைவு !
இராமலிங்கர் பணிமன்றத்தில் நான் பணியாற்ற தொடங்கிய நாளில் நான் புதுமையான அனுபவங்களைக் கண்டு வந்தேன் .
அழைப்பிதழ் வடிவமைக்கும் நண்பர் ஓவியர் ஈசுவரி ,
சுவரொட்டிகள் வரைந்திடவும் , இரவோடு இரவாக 1000 சுவரொட்டிகளை ஓட்டும் பணியாளர் படையைக் கொண்டிருந்த ஆறுமுகம்
– ஒளிப்படம் எடுக்கவும் பின்னர் நாள் தவறாமல் செய்தி அனுப்பவும் , பின்னர் படத் திரட்டான ஒளிப்பட மடலம் தயாரித்து அளிக்க நண்பர் மணியத்தின் குழுவும் இருந்தார்கள் .
எளிமைக்கு எளிமையாகவும் – அடக்கமாகவும் ஒளிப்படங்கள் எடுப்பதில் அவர் வல்லவராக இருந்தார் .
அரசியல் தலைவர்கள் , அருட்செல்வர் ,
சொற்பொழிவாளர்கள்
மணியின் பெயரைச்சொல்லி ஒளிப்படம் கேட்பார்கள் .
பிறகு அவரவர் இல்லத்துக்கும் அவரை அழைப்பார்கள் .
பிறகு சில ஆண்டுகள் அவரைத் தொடர்ந்து காண முடியவில்லை . .
இளைஞர்கள் ,புதிய தொழில்நுட்பம் கற்றவர்கள் வருவதை நாம் வரவேற்க வேண்டும் என்று பலரை அறிமுகப்படுத்தினார் .
பண்பாளர் மணி மறைந்தார் என்பதைச் செய்தித்தாளில் தான் கண்டேன் .
பழமையும் எளிமையும் வாய்ந்த திறனாளர் ” ஒளிப்பட வித்தகர் ” மணியின் குடும்பத்தார்க்கு என் ஆறுதல் .
துயரோடு
ஒளவை நடராசன்
.

Add a Comment