தமிழ் வளர்ச்சித்துறை
திருவள்ளூர் மாவட்டம்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம்
2023 2024
நாள்: திருவள்ளுவராண்டு 2054 /புரட்டாசி – 25,26
2023 அக்டோபர் 12, 13
(வியாழன், வெள்ளி)
இடம்: உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி, பொன்னேரி
பெருந்தகையீர், வணக்கம்,
அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
பொங்குத் தமிழ்ப் பொளிரும் பொன்னேரி நகரில் வண்ணமிகுத் திருவிழா!
மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா!
பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா!
வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!
ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா!
தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா!
கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து இருநாள்கள் முழுவதும்
ஆட்சித்தமிழை உணர்வோடும் கேட்க வாருங்கள்!
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை
தமிழ் வளர்ச்சித் துறை
திருவள்ளூர் மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் – 2023-24
நிகழ்ச்சி நிரல்
இடம்: உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி, பொன்னேரி
திருவள்ளுவராண்டு 2054/ புரட்டாசி – 25
முதல்நாள்: 12.10.2023 வியாழக்கிழமை
முற்பகல் 10.00 – 10.30: வருகைப்பதிவு
10.30: தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
முனைவர் இரா. அன்பரசி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மு.கூ.பொ.
திருவள்ளூர்
முன்னிலையுரை:
முனைவர் ம.ச தில்லைநாயகி
முதல்வர், உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி,
பொன்னேரி
தலைமையேற்றுத் தொடக்கவுரை:
திரு.ஆ. இராஜ்குமார் எம்.ஏ., பி.எட்.,
மாவட்ட வருவாய் அலுவலர் (ம) கூடுதல் மாவட்ட நீதிபதி,
திருவள்ளூர்
11.30 11.45: தேநீர் இடைவேளை
11.45 1.00
முத்தமிழறிஞர் கலைஞர்
நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடுகள்:
முனைவர் வி. இலட்சுமிபதி,
முதல்வர்,
டி.ஜெ.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
பெருவாயல், கவரைப்பேட்டை
பிற்பகல் 1.00 – 2.00: உணவு இடைவேளை
2.00-3.00
ஆட்சிமொழி வரலாறு/ சட்டம், அரசாணைகள்:
முனைவர் சிவ. முருகேசன்
இணைப் பேராசிரியர்
உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி, பொன்னேரி
3.00 – 4.00
அலுவலகக் குறிப்புகள், வரைவுகள்,
செயல்முறை ஆணைகள் தயாரித்தல்:
திரு.கு.கஜேந்திரன்
துணை ஆட்சியர்/ மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் (பணி நிறைவு)
4.00-4.15: தேநீர் இடைவேளை
4.15 – 5.30
ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும்:
திருமதி ப. இராஜேஸ்வரி
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (பணி நிறைவு)
ஆட்சிமொழிப் பயிலரங்கம் 2023-24
நிகழ்ச்சி நிரல்
இடம் : உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி, பொன்னேரி
திருவள்ளுவராண்டு 2054/ புரட்டாசி – 26
இரண்டாம் நாள்: 13.10.2023 வெள்ளிக்கிழமை
முற்பகல் 10.00 – 10.15 : வருகைப்பதிவு
10.15 – 11.30
முத்தமிழறிஞர் கலைஞரின் சமுதாயச் சிந்தனைகள்:
முனைவர் ப. தேவராஜ்
தமிழ்த்துறை இணைப்பேராசிரியர்
உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி, பொன்னேரி
11.30-11.45: தேநீர் இடைவேளை
11.45 – 1.00
மொழிப்பயிற்சி,
மொழிபெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம்:
முனைவர் ச. முருகேசன் தமிழ்த்துறை தலைவர்
தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவலக் கண்ணன் செட்டி
இந்துக் கல்லூரி, பட்டாபிராம்
பிற்பகல் 1.00 – 2.00: உணவு இடைவேளை
2.00 – 3.00
கணினித்தமிழ்:
முனைவர் க. சண்முகம்
உதவிப்பேராசிரியர்
எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி,
காட்டாங்குளத்தூர்.
3.00 – 3.15: பங்கேற்றோர் கருத்துரை
(பயிற்சியில் கலந்துகொண்டவர்களின் ஐயங்களுக்கு விளக்கமளித்தல்)
3.15 -3.30: தேநீர் இடைவேளை
ஆட்சிமொழிப் பயிலரங்கம் நிறைவு
ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 2023 – 24
நிகழ்ச்சி நிரல்
இடம் : உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி, பொன்னேரி
திருவள்ளுவராண்டு 2054/ புரட்டாசி -26
13.10.2023 வெள்ளிக்கிழமை
பிற்பகல் 3.30 : தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை :
முனைவர் இரா. அன்பரசி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மு.கூ.பொ.
திருவள்ளூர்
தலைமையுரை:
மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர்,
திருவள்ளூர்.
ஆட்சிமொழித் திட்டச்
செயலாக்கச் சிறப்புரை:
முனைவர் ஒளவை அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
சென்னை
கருத்துரை:
முனைவர் ம.ச. தில்லைநாயகி
முதல்வர், உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி,
பொன்னேரி
முனைவர் இரா. வேதநாயகி
முதல்வர், தளபதி கே. விநாயகம் கலை (ம) அறிவியல் மகளிர் கல்லூரி,
திருத்தணி
முனைவர் மா. திருச்சேரன்
இணைப்பேராசிரியர், துறைத் தலைவர் (கணிதவியல்)
உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி, பொன்னேரி
நன்றியுரை :
திருமதி ஜெ. சாவித்திரி
உதவியாளர், தமிழ் வளர்ச்சித் துறை, திருவள்ளூர்
நாட்டுப்பண்
“அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு கூறுபாடுகளைப் பிரித்து, நூல்களை இயற்றி இலக்கியங்களைத் தந்துள்ள மொத்தப் பெருமை நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே உள்ளது வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை”
– முத்தமிழறிஞர் கலைஞர்

Add a Comment