POST: 2023-09-16T11:27:38+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி. சென்னை – 600113. தொ.பே. 044-22542992
—————————————————
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – நிகழ்ச்சி : 4
2023 செப்டம்பர், 15, பேரறிஞர் அண்ணா 115ஆம் பிறந்த நாள் (ம)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் திருநாள்

நாள் : திருவள்ளுவராண்டு 2054, ஆவணி 29
15.09.2023 – வெள்ளிக்கிழமை
நேரம்: முற்பகல் 11.00 மணி
இடம் : தமிழ்த்தாய் ஊடக அரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

அழைப்பிதழ்

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை :
திரு. கோபிநாத் ஸ்டாலின்
இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

முன்னிலை :
நிறுவனப் பேராசிரியர்கள் (ம) நிருவாக அலுவலர்கள்

நோக்கவுரை :
முனைவர் ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம்

தலைமையுரை:
மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள்
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

பேருரை:
கல்விக்கோ முனைவர்
கோ. விசுவநாதன் அவர்கள்
நிறுவுநர்-தலைவர், தமிழியக்கம்
நிறுவுநர்-வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்

தலைப்பு:
அண்ணா ஒரு வரலாறு

நன்றியுரை :
முனைவர் நா. சுலோசனா
உதவிப்பேராசிரியர் (மு.நி.ஆ.) தமிழ் மொழி (ம)
மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

நிகழ்ச்சித் தொகுப்பு:
செல்வி மா.பூ. லத்திகா
ஒருங்கிணைந்த முதுகலை மாணவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

நாட்டுப்பண்

இந்து தமிழ் திசை – 16 9 2023
பக்கம் எண் : 5

அண்ணா பிறந்தநாள் : உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நூல்கள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை .

சென்னை: அண்ணா பிறந்தநாளையொட்டி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 50 சதவீதம் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் தொடர்பான நூல்கள், அரிய வகை நூல்கள், பாரதியார் சித்திரக் கதைகள்,பாரதி வாழ்க்கை வரலாறு, அரசுப்போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் போன்றவை தமிழாய்வை மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழார்வலர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில், அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் நேற்று ( செப்.15 ) முதல் அக்.15 – ம் தேதி வரை இந்த நூல்கள் 30 முதல் 50 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படவுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் அமைந்துள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையத்திலும், தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வளாகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விற்பனை நடைபெறும்.

நூல்கள் தொடர்பான விவரங்களை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இணையவழியில் பணம் செலுத்தி நூல்களை பெறும் வசதியும் உள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கூடுதல் விவரங்களுக்கு 96000 21709 என்றதொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

https://www.hindutamil.in/news/tamilnadu/1124151-world-tamil-research-institute-books-on-sale-at-50-discount.html

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *