POST: 2023-07-11T17:31:33+05:30

தமிழ் வளர்ச்சித் துறை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்
நூற்றாண்டு விழா
ஆட்சிமொழிக் கருத்தரங்கம்

அழைப்பிதழ்

இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தரமணி, சென்னை.

நாள்: திருவள்ளுவராண்டு 2054, சுபகிருது, ஆனி – 27.

12.07.2023 புதன் கிழமை

நேரம்: முற்பகல் 10.00 மணி

பெருந்தகையீர்,

வணக்கம்.

அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
வங்கக்கடல் நகரில் நடக்கும் வண்ணமிகு திருவிழா !

மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா !

பனி உறைந்த பூவாக,
கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா !

வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!

ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து –
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா !

தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா !

கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து ஒருநாள் முழுவதும் ஆட்சித் தமிழை உணர்வோடு கேட்க வாருங்கள் !

ஔவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

காலை
10.00 – 10.30 வருகைப்பதிவு

10.30-11.00 வரவேற்புரை
ஔவை அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஆட்சிமொழி கருத்தரங்கத்தின் முதல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை

திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள்

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

வாழ்த்துரை
மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப.,

அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

நன்றியுரை
திருமதி பொ. பாரதி,
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்

11.00-11.45 முத்தமிழ் அறிஞர் கலைஞர் நிகழ்த்திய
செம்மொழி செயற்பாடுகள்

கவிஞர் நெல்லை ஜெயந்தா

11.45-12.00 தேநீர் இடைவேளை

12.00-12.45 காலந்தோறும் தமிழ் ஆட்சிமொழி வரலாறு

திரு கூ.வ. எழிலரசு
மேனாள் தமிழ் வளர்ச்சி இயக்குநர்

12.45-1.30 குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் தொடர்பில் தீர்வுகள்

திருமதி க. பவானி,
தமிழ் வளர்ச்சி மண்டில துணை இயக்குநர்

1.30-2.00 உணவு இடைவேளை

2.00-2.45 அரசுப் பணியாளர்களும் ஆட்சிமொழிச் சட்டமும்

திரு. ஆக்கம் மதிவாணன்,
வழக்குரைஞர்

2.45-3.30 கணினித் தமிழ்

முனைவர் அண்ணா கண்ணன்
ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

3.30-3.45 தேநீர் இடைவேளை

3.45-4.30 மொழிப்பயிற்சி

முனைவர் ஆ. மணவழகன்
இணைப் பேராசிரியர்,
சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப்புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

4.30-5.15 பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல்

அளப்பறியாக் கோபுரமே!
மருதப் பூக்கள் வனப்புடைய மனத்தோனே!
கலைஞர் கோவே!
களைப்பறியாப் பொதிய மலைக் காற்றே!
காலமெல்லாம் உம்மைக் கைதொழுது வாழ்த்துவோமே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *