பல்லாண்டு வாழ்க
வட சென்னையில் உள்ள டாக்டர் குருசாமி முதலியார் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியின் மேனாள் முதல்வர் மற்றும் நீடு புகழ் கொண்ட தமிழாசிரியர் புலவர் இராமலிங்கம் அவர்களின் 93 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு புலவரை நேரில் அவருடைய அண்ணா நகர் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் அளவளாவி பொன்னாடை சூட்டி வாழ்த்துப்பெற்று மகிழ்ந்தேன்.
திங்கட்கிழமை 7.10.24 அன்றையப் பொன்மாலைப் பொழுதில் பிறந்தநாள் நாயகரின் இனிய குடும்பத்தினருடனும் அண்ணாநகர் தமிழ்ச்சங்கப் பெருமக்களுடன் இணைந்த ஒளிப்படக்காட்சி.
புலவர் புகழ் ஓங்குக

Add a Comment