அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
சுத்த சன்மார்க்க நிலையம்
வடலூர், கடலூர் மாவட்டம்.
”சுத்த சன்மார்க்க மடல்” சிறப்புஇதழ் வெளியீட்டுடன்
உத்தமர் ஓமந்தூரார் 54- ஆம் ஆண்டு நினைவு நாள் புகழஞ்சலி விழா
நாள் : 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை
இடம் : அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் அய்யா கலையரங்கம். வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகம், வடலூர்.
பேரன்புடையீர்! வணக்கம்.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், காலத்தால் நிலைத்த மக்கள் நலத் திட்டங்களைத் தந்தவரும், வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தின் நிறுவனருமான உத்தமர் ஓமந்தூரார் அவர்களின் 54-வது நினைவு நாள் புகழஞ்சலி விழா சிறப்போடும் பொறுப்போடும் நடைபெறுகிறது.
விழாவில் உத்தமர் ஒமந்தூரார் அவர்கள், அருட்செல்வர் அய்யா அவர்கள் ஆகியோர் திருஉருவப் படங்களைத் திறந்து வைத்து தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறை இயக்குனர் திருமிகு.ந.அருள் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். சுத்த சன்மார்க்க நிலையத்தின் செயலாளரும் ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளருமான இரா.செல்வராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றி ‘சுத்த சன்மார்க்க மடல்’ சிறப்பிதழை வெளியிடுகிறார்.
சிறப்பு விருந்தினர்களாக ‘ரெட்டி முரசு’ இதழ் ஆசிரியர் திரு.இளங்குமரன் அவர்கள், துணை ஆசிரியர் திரு.C.கோதண்டராமன் அவர்கள், சுத்த சன்மார்க்க நிலையத்தின் பொருளாளர் பரவளூர் திரு.பூ.ஆசைதம்பி அவர்கள், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.வெ.இராமானுஜம் அவர்கள், சன்மார்க்க சாது திரு.கு.நந்தகோபால் (Rt.VAO) அவர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர் திரு.D.ஜெயபால் அவர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில், பள்ளித் தேர்வுகளில் சிறந்த வெற்றிகளைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் படுகின்றன. ஆசிரியப் பெருமக்களுடன் அனைவரும் அன்போடு வருக !
-இப்படிக்கு-
புரவலர்
ம.பாலசுப்பிரமணியம்
தலைவர்
சங்கர் வாணவராயர்
இரா.செல்வராஜ்
செயலாளர், சுத்த சன்மார்க்க நிலையம், வடலூர்.
நிகழ்ச்சி நிரல்
25.08.2024 ஞாயிற்றுக்கிழமை
காலை 5.30 மணி : அகவல் பாராயணம் திரு. D.ஜெயபாஸ் அவர்கள்,
தலைமையாசிரியர் (ஓய்வு), வ.கு.மே.நி.பள்ளி, வடலூர். திரு. கு.நந்தகோபால் அவர்கள். ( V.A.O, ஓய்வு), ஆபத்தாரணபுரம், வடலூர்,திரு.வெ.இராமானுஜம் அவர்கள்,பெ.ஆ.க.தலைவர், வடலூர், மற்றும் அன்புள்ளங்கள்.
காலை 9.00 மணி : ஓ.பி.ஆர். திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தல் – மலரஞ்சலி
இறைவணக்கம் : மாணவிகள்.
வரவேற்புரை
மற்றும் ‘சுத்த சன்மார்க்க மடல்’ சிறப்பிதழ் வெளியீடு திரு.இரா.செல்வராஜ் அவர்கள், செயலாளர், சுத்த சன்மார்க்க நிலையம், தாளாளர், ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்கள், வடலூர்.
சிறப்பிதழ் முதல் பிரதியைப் பெற்று வாழ்த்துரை ‘ரெட்டி முரசு’ இதழ் ஆசிரியர் திரு.இளங்குமரன் அவர்கள், சென்னை. முன்னிலை: திரு.வெ.இராமானுஜம் அவர்கள்,தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகம், பரவளூர் திரு.பூ. ஆசைதம்பி அவர்கள், பொருளாளர், சுத்த சன்மார்க்க நிலையம்.
சான்றோர் பெருமக்கள்
உத்தமர் ஓமந்தூரார் அவர்கள், பத்மபூஷண் டாக்டர்.நா.மகாலிங்கம் அய்யா அவர்கள்,
ஆகியோர் திருஉருவப் படத்திறப்பு
மற்றும் சிறப்புரை அரசு தமிழ்வளர்ச்சித் துறை இயக்குனர், திரு. ந.அருள் அவர்கள், சென்னை.
வாழ்த்துரை:
திரு.C.கோதண்டராமன் அவர்கள் துணைஆசிரியர் ‘ரெட்டி முரசு’, சென்னை.
சன்மார்க்க சாது திரு.கு.நந்தகோபால் அவர்கள், ஆபத்தாரணபுரம்.
மாவட்ட / மாநில / பல்கலைக் கழக அளவுகளில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நமது மாணவ மாணவிகளுக்குப் பரிசளிப்புகள் மற்றும் வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் 100/100 மதிப்பெண் பெற்ற நமது பள்ளி / கல்லூரிகளின் மாணவ மாணவிகள்.
சிறந்த ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் பரிசளிப்புகள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் நன்றியுரை
திருமதி. லதாராஜாவெங்கடேசன் அவர்கள்,
நிர்வாக அலுவலர், ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்கள், வடலூர்.

Add a Comment