POST: 2024-05-05T10:47:04+05:30

சங்ககாலப்புலவர் பெருமக்களை மலர் மாலையால் போற்றுதும்!

தரணி புகழ் சங்கப்புலவர்களின் பரணி பாடும் தமிழ் வளர்ச்சித்துறையின் செம்மாந்த பணி

பாவேந்தரின் 133 ஆம் பிறந்த நாள்(29.4.2024) முன்னிட்டு தமிழ்நாடு அரசின்
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக
தமிழ்க்கவிஞர் திருநாள்
என கொண்டாடப்படுகின்றது.

பாவேந்தரின் ஒளிப்படத்திற்கு மலர் வணக்கம் செய்வதோடு
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக நிறுவப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்
இடைக்கழி நாட்டிலுள்ள சங்ககாலப் புலவர் நல்லூர் நத்தத்தனார் நினைவுத்தூணுக்கும்

மகிபாலன்பட்டியில் உள்ள புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத் தூணுக்கும்

சங்க காலத்தில் பெரும் புலவர்களான
கருவூர் ஓதஞானியார்,
கருவூர்க் கிழார்,
கருவூர்க் கண்ணம்பாளனார், கருவூர்க் கதப்பின்னை, கருவூர்க் கதப்பின்னைச் சாத்தனார்,
கருவூர்க் கலிங்கத்தார், கருவூர்க் கோசனார்,
கருவூர்ச் சேரமான் சாத்தனார், கருவூர் நன்மார்பனார்,
கருவூர்ப் பவுத்திரனார், கருவூர்ப் பூதஞ்சாத்தனார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார்
ஆகிய பன்னிரு புலவர்களின் நினைவுத் தூணுக்கும்

தென்காசி மாவட்டத்தில் உள்ள புலவர் மாங்குடி மருதனார் நினைவுத் தூணுக்கும்

சிவகங்கை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள நல்லிசைப்புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நினைவுத் தூணுக்கும்

கள்ளக்குறிச்சி மாவட்டம்
திருக்கோவிலூரில் உள்ள புலவர் கபிலர் நினைவுத் தூணுக்கும்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத் தூணுக்கும்

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள சங்க கால 29 மதுரைப் புலவர்களான
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்.
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங் கண்ணனார்
மதுரைத் தமீழக்கூத்தன் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங் கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிள நாகனார்
மதுரைப் பேராலவாயார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசான்
மாலை மாறன் முடத்திருமாறன் பெயர்கள் பதித்த
நினைவுத் தூணுக்கும்

மற்றும் தமிழன்னை திருவுருவச் சிலையோடு நாற்பத்து ஏழு பெரும் புலவர்களுக்கும்
மலர் வணக்கத்தினை
அந்தந்த மாவட்டங்களில்
செய்யப்பெற்று பெருமிதமாக சங்க காலப் புலவர்களை போற்றும் விதமாக தமிழ்க் கவிஞர் நாள் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.

விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
திருமதி ஆஷா அஜித்
இ ஆ ப

தென்காசி மாவட்ட ஆட்சியர்
திரு கமல் கிஷோர் இ ஆ ப

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள்

திரு சுந்தர்
தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர்

முனைவர் நாகராசன்
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்

திருமதி சுசீலா தமிழ் வளர்ச்சித் துறை
உதவி இயக்குநர்

திருமதி சித்திரா தமிழ் வளர்ச்சித் துறை
உதவி இயக்குநர்

திருமதி பாரதி தமிழ் வளர்ச்சித் துறை
உதவி இயக்குநர்

திருமதி ஜோதி தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்

மற்றும்

அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள்,
தமிழ் வளர்ச்சித் துறையின் பணியாளர்கள்,
ஊடக நண்பர்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *