POST: 2024-04-28T06:32:46+05:30

கடமை -கனிவு- காப்பு

கடந்த பத்தாண்டுகளாக காந்தி
ஔவை இல்லத்தின் வாயில் காவலர்,
தூய்மைப்பணியில் விழிப்பானவர்
பாடிக்கொண்டே பணியாற்றும் அரும் பணியாளர்

பெற்றோர்கள் இருவரும்
அன்பொழுக காந்தி… காந்தி ….என்று அழைத்தப் போதெல்லாம் வண்ணமுற காத்து
வாய் முணுமுணுக்காமல் சொன்னபடி கேட்பவர்.

தீநுண்மிக் காலத்திலும் தவறாது பணிக்கு வந்த
உண்மையாளர்.

எந்தையாரின் செவிலியர்கள் அனைவரும் இவரை
அப்பா என்று அன்புடன் அழைக்கும் வாய்ப்புப் பெற்றவரின்
மகன் இரவிசங்கரின் திருமணத்திற்கு

மருத்துவர் பத்மானந்தன்,
திரு கஜேந்திர பாபு,
பொன்னேரி பிரதாப்
புடை சூழ வெள்ளிக்கிழமை காலை (26.4.24) சென்று வாழ்த்தி மகிழ்ந்தோம்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *