தோற்றம்: 9.9.1926
மறைவு: 9.4.2024
அருளாளர் ஆர்.எம்.வீ
ஒர் ஆலயம்!
குறிப்பின் குறிப்புணர்வாரை என்று சொல்வது போல புரட்சித்தலைவரின் குறிப்பறிந்து நடப்பதில், ஆர்.எம்.வீ.க்கு நிகராக, யாரையும் சொல்ல முடியாது”
பல ஆண்டுகளுக்கு முன்பு, இராயப்பேட்டையில் திருவள்ளுவர் கழகம் என்பதை நடத்தினார்.
சென்னை, கம்பன் கழகத்தில் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
அவரிடம் கனிவு எவ்வளவு உண்டோ, அந்த அளவிற்குக் கண்டிப்பும் உண்டு.
ஆனால், தெளிவான முடிவெடுப்பதில் தேர்ந்தவராக, ஆர்.எம்.வீ. அவர்கள், அருளாளராகவும், பண்பாளராகவும், வள்ளலாகவும் செம்மாந்த வாழ்க்கை நடத்திச் சிறந்து விளங்கியவர்
-ஔவை நடராசன்
கடமை, கணக்கு, தெளிவு,நேர்மை என்று வாழ்வைத் தொடங்கி அரசியலில் கனிந்து முதிர்ந்து, பலருக்குத் தோள் கொடுத்து உயர்த்திய பெருமிதத்தோடு அருளாளர் ஆர்.எம்.வி நம்மிடையே இன்று இல்லை.
அயராது உழைத்த அவருடைய நாள்கள் வரலாற்றில் இடம்பெறும் வான் புகழ் கொண்டவையாகும்.
எவர் மனத்தையும் நோகாமல் தன் போக்கில் புரட்சித் தலைவரையே திருத்திய பெருமை வேறெவருக்கும் இல்லை என்று எந்தையார் பல முறை சொல்லக் கேட்டு இருக்கிறோம்.
அருளானரால் அறம் தழைத்தது.
இளைஞர்களிடம் ஆற்றல் செழித்தது.
அருளாளர் ஏற்றிய திருவிளக்கின் ஒப்பற்ற ஒளிச்சுடர்கள் தமிழகத்தில் எங்கும் ஒளி வீசுகிறது.
அவரால் வளர்ந்த நடிகர்கள் பலர்.
. அவரால் முதன்மை பெற்ற கல்வியாளர்கள் பலர்.
இப்படி எண்ணிக் கொண்டே போகலாம்.
பணிவுடன்
ஔவை கண்ணன்
ஒளவை அருள்
ஔவை பரதன்

Add a Comment