POST: 2024-04-08T10:09:42+05:30

மெல்லத்தமிழினி வாழும்

தமிழ்நாடு அரசு 38 மாவட்டங்களிலும்
கல்லூரி மாணவர்களுக்காக ‘

இளையோர் இலக்கியப் பாசறையை’

தமிழ் வளர்ச்சித்துறை மூலம் நடத்தி வருகிறது.

கவிஞர்.நெல்லை ஜெயந்தா அவர்கள் தமிழக அரசால் இந்நிகழ்வின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வருகிற 100 மாணவர்களுக்கு சான்றிதழ்,
தேநீர் & மதிய உணவு , குறிப்பேடு, பேனா ஆகியவற்றை வழங்குகின்றனர்.

தகுதி கொண்ட ஆறு கருத்தாளர்களை அழைத்து தரமான இலக்கிய உரைகளை ஆற்ற வைத்து கௌரவமான தொகையினையும் அரசு வழங்குகிறது.

நான் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில்
‘ மரபுக் கவிதைகள் ‘ குறித்துப் பேசினேன்.

தேனி மாவட்டத்தில் நிகழ்வை நடத்த வேண்டும் என்று யோசித்தவுடன் கவிஞர்.நெல்லை ஜெயந்தா அவர்கள் என்னிடம் பேசினார்.

கல்லூரி நிர்வாகமும் , முதல்வரும் உடனே அனுமதி அளித்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளையும் தொடர்பு கொண்டோம்.

எங்கள் கல்லூரி உள்ளிட்ட ஏழு கல்லூரிகளில் நூறு மாணவர்கள் முன்பதிவு செய்திருக்கின்றனர்.

பத்து பேராசிரியர்களும் வருகை தருகின்றனர்.

கவிஞர் நெல்லை ஜெயந்தா , எழுத்தாளர். இந்திரா சௌந்தர்ராஜன், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். முருகன் ,
திரு. திருநாவுக்கரசு உள்ளிட்ட கருத்தாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.

‘ புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும் ‘ என்கிற தலைப்பில் நான் பேசப்போகிறேன்.

இளைய தலைமுறையிடம் தமிழையும் , இலக்கியத்தையும் கொண்டு சேர்ப்பதற்காக பல்வேறு வழிகளில் இடைவிடாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அரசைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.

இது சம்பிரதாயமான விழாவாகி விடாமல் உயிர்ப்போடு நிகழக் காரணம் நெல்லை ஜெயந்தாவின் தொடர் அர்ப்பணிப்பு.

அவர் சுதந்திரமாக இயங்க அனுமதித்து தேவையான அனைத்து வசதிகளையும் மாநில தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் செய்து தருகிறார்.

அதனாலேயே இது சாத்தியமாகிறது.

அவர்கள் இருவருக்கும் இந்நிகழ்விற்கு இடமளித்து முழு ஒத்துழைப்பையும் வழங்கிய கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வருக்கு நம் பேரன்புகள்.

உத்தமபாளையம்
கருத்த ராவுத்தர் கல்லூரி
தமிழ்த் துறைப் பேராசிரியர் ரபீக்

18.2.24

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *