தினசெய்தி – 25 2 2024
பக்கம் எண் : 4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 202
விளம்பர வீதி -7
இணைய விளம்பரங்கள் !
முனைவர் ஔவை அருள்
இன்று கணினிப் பயன்பாட்டுடன் இணையப் பயன்பாடும் சேர்ந்து, உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது என்று சொல்கின்றனர்.
உலகில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகில் புவியியல் அடிப்படையில் இணையம் பயன்படுத்துபவர்களில் ஆசிய பெருநிலப்பகுதி முதலிடத்தில் உள்ளது.
ஆசிய பெருநிலப்பகுதியில் 1076.7 மில்லியன் நபர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஐரோப்பியப் பெருநிலப்பகுதியில் 518.5 மில்லியன்,
வட அமெரிக்க பெருநிலப்பகுதியில் 273.8 மில்லியன்,
இலத்தீன் அமெரிக்கா/கரீபியன் பெருநிலப்பகுதியில் 254.9 மில்லியன்,
ஆப்பிரிக்கப் பெருநிலப்பகுதியில் 167.3 மில்லியன்,
நடுகிழக்கு பெருநிலப்பகுதியில் 90 மில்லியன்,
ஓசியாளியா/ஆஸ்திரேலியா பெருநிலப்பகுதியில் 24.3 மில்லியன் என்று உள்ளது.
உலக மக்கள் தொகையின் அடிப்படையில் இணையம் பயன்படுத்துபவர்களைக் கணக்கிட்டால் வட அமெரிக்கா பெருநிலப்பகுதியில் 78.6 சதவிகிதமாகவும்,
ஓசியானியா/ஆஸ்திரேலியா பெருநிலப்பகுதியில் 67.5 சதவிகிதமாகவும்,
ஐரோப்பியப் பெருநிலப்பகுதியில் 63.2 சதவிகிதமாகவும்,
இலத்தீன் அமெரிக்கா/கரீபியன் பெருநிலப்பகுதியில் 42.3 சதவிகிதமாகவும்,
நடுகிழக்குப் பெருநிலப்பகுதியில் 40.2 சதவிகிதமாகவும், ஆசிய பெருநிலப்பகுதியில் 27.5 சதவிகிதமாகவும்,
ஆப்பிரிக்கப் பெருநிலப்பகுதியில் 15.6 சதவிகிதமாகவும் உள்ளது.
மொத்தத்தில் இந்த உலகத்தில் சராசரியாக 34.3 சதவிகிதத்தினர் இணையம் பயன்படுத்துகின்றனர்.
அடுத்து வரும் ஆண்டுகளில் இணையம் பயன்படுத்துபவர்களின் சதவிகிதம் மிக வேகமாக அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், இணையம் பயன்படுத்துபவர்களைத் தங்களது வணிகத்துக்கான வாடிக்கையாளர்களாக்கிக் கொள்ள வேண்டுமென்கிற நோக்கில் பல நிறுவனங்கள் தங்கள் நிறுவன அமைப்பு, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அவற்றின் சிறப்புகள், விற்பனை மற்றும் சேவை போன்ற தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டு தனியாக இணையதளம் அமைத்துக் கொண்டிருக்கின்றன.
இன்று உலகில் பல மில்லியன் இணையதளங்கள் உருவாக்கப்படுவதற்கு, மக்களிடம் தங்களது உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதுடன், தங்கள் பொருட்களுக்கு உலகளாவிய சந்தையைப் பெற்றுவிட வேண்டும் என்கிற நோக்கமும்தான் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
வணிக நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்த அமைக்கப்பட்ட தளங்கள் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சிவ தகவல்களை அளிக்கின்றன.
இருப்பினும், இணையம் பயன்படுத்துபவர்களை முழுமையாக அந்தத் தளத்திற்குக் கொண்டு வந்து, அதன் மூலம் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடவோ அல்லது சேவையைக் கொண்டு சேர்த்திடவோ முடியவில்லை, நேரடியாக அந்தத் தளத்திற்கு இணையப் பயன்பாட்டாளர்களைக் கொண்டு வர முடியவில்லை.
இந்நிலையில் இந்த வணிக நிறுவனங்கள் இணையப் பயன்பாட்டில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் கூகுள், யூ டியூப், முகநூல், யாகூ, அமேசான், எம் எஸ் என், விக்கிப்பீடியா, பிங், ஈ-பே, டுவிட்டர், வேர்டுபிரஸ், விங்கிடுஇன், மைக்ரோசாப்ட், ஆஸ்பக், பிரிண்டரெஸ்ட் போன்ற சில முக்கியத் தளங்களிலும், பிற இணையதளங்களிலும் விளம்பரங்கள் செய்து, அதன் மூலம் தங்கள் உற்பத்தி மற்றும் சேவைகளை இணையப் பயன்பாட்டாளர்களிடம் கொண்டு செல்லவும், அங்கிருந்து தங்களுடைய தளத்திற்கு இணையப் பயன்பாட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சியிலும் இறங்கின.
இணையதளங்களும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை ஏற்று அந்த விளம்பரங்களைத் தங்கள் தளங்களுக்கேற்றவாறு தயார் செய்து தங்களது தளங்களில் காட்சிப்படுத்தியும், நவீனத் தொழில்நுட்ப வழிமுறைகளைப் பின்பற்றியும் விளம்பரதாரர்களுக்குப் புதியதொரு விளம்பர வாய்ப்பை அளித்தன.
இந்த விளம்பர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட வணிக நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத் தயாரிப்புகளுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பைப் பெற்றனர்.
தங்களுடைய உற்பத்தியை அதிகரிக்க முடியாத சிறு தொழில் நிறுவனங்கள் சிவ தங்கள் நிறுவனத்தின் விற்பனையை தங்களுடைய நாடுகளில் மட்டும் விற்றால் போதும் என்று விரும்பினர்.
அவர்களுடைய விருப்பத்திற்கும் இணையதளங்கள் தனி வசதிகளைச் செய்து கொடுத்தன.
இதன் மூலம் அந்த நிறுவனங்களின் விளம்பரங்கள், குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் பார்வைக்குக் கிடைக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டன.
சில வணிக நிறுவனங்கள் ஆங்கிலம் தவிர்த்து, தங்கள் தாய்மொழியிவான தளங்களில் மட்டும் தங்கள் நிறுவனப் பொருட்களுக்கான விளம்பரத்தைக் காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று கருதின.
அவர்களது கருத்துக்கும் மதிப்பளித்து, அவர்கள் விரும்பும் மொழி தளங்களில் மட்டும் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
விளம்பரதாரர்களான வணிக நிறுவனங்களின் விருப்பங்களுக்கேற்றபடி இணையத்தில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது மட்டுமின்றி, கணினித் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி வணிக நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கும் மேலான வசதிகளுடன் விளம்பரங்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் இடம் பெறத் தொடங்கின.
இணையத்தில் செய்யப்படும் விளம்பரங்கள் அனைத்தும் இணையம் பயன்படுத்துபவர்களின் ஆழ் மனத்தில் ஊடுருவி, அவர்களின் மனதில் குறிப்பிட்ட பொருளையோ அல்லது அவர்களின் சேவையையோ இடம் பெறச் செய்துவிடும் வல்லமையுடையதாக இருப்பதால் இணைய விளம்பரங்கள் இன்று மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றன,
இணையதளங்கள் வணிக நிறுவனங்களின் விற்பனை அல்லது சேவையை இணையம் பயன்படுத்துபவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகப் பல விதமான விளம்பர உத்திகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த விளம்பரங்கள் உள்ளூர்ச் சந்தைகளை மட்டும் எல்வைகளாகக் கொள்ளாமல் உலகளாவிய எல்லையைக் கொண்டிருப்பதால் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இணையத்தில் இடம் பெறும் விளம்பரங்கள் அனைத்தும் தேடுபொறி (Search) விளம்பரங்கள், காட்சிப்படுத்தல்/ விளம்பர பதாகைகள் (Display/Banner) விளம்பரங்கள், வகைப்படுத்தல் (Classified) விளம்பரங்கள், கைபேசி (Mobile) விளம்பரங்கள், எண்ணிம நிகழ்படம் (Digital Video) விளம்பரங்கள், முதன்மை உருவாக்கம் (Lead Generation) விளம்பரங்கள், நல்கை (Sponsorship) விளம்பரங்கள், வளமிகு ஊடகம் (Rich Media) விளம்பரங்கள், மின்னஞ்சல் (Email) விளம்பரங்கள் எனும் தலைப்புகளில் வகைப்படுத்தப்படுகின்றன.
தேடுபொறி விளம்பரங்கள் இணையப் பயன்பாட்டாளர்கள் இணையத்திலிருக்கும் தேடுபொறிகளில் குறிப்பிட்ட சொல் அல்லது சொற்றொடரைத் தேடும் பொழுது விளம்பரதாரர்களின் நிறுவனத்தின் பெயர் அல்லது அவர்களது நிறுவனத்திற்கான இணையதள முகவரியுடனான குறிப்புகளை இணைக்க இணைய நிறுவனங்கள் அதற்கான விளம்பரக் கட்டணைத்தைப் பெற்றுக் கொண்டு அந்தச் சேவையை அளிக்கின்றன.
குறிப்பிட்ட சொல் அல்லது சொற்றொடருக்கான தேடல் முடிவுகளின் மேற்பகுதியில் அல்லது பக்கத்தில் தேடப்பட்ட சொல் அல்லது சொற்றொடரின் முக்கியக் குறிப்புகளாக விளம்பரங்கள் இடம் பெறுகின்றன.
இங்கு சொடுக்கும் நிலையில் அங்கிருந்து விளம்பரதாரரான நிறுவனத்தின் தளத்திற்குச் செல்லும்படி இணைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இங்கு இணையப் பயன்பாட்டாளர் இந்த உரையைச் சொடுக்கிக் குறிப்பிட்ட விளம்பரதாரரான நிறுவனத்தின் தளத்திற்குச் செல்லும் கணக்கை அடிப்படையாகக் கொண்டு விளம்பரக் கட்டணங்கள் பெறப்படுகின்றன.
இதை செலுத்தப்பட்ட பட்டியல்கள் முறை என்கின்றனர்.
இணையப் பயன்பாட்டாளர் சமர்ப்பித்த குறிப்பிட்ட சொற்றொடருக்கான தேடவின்போது சூழலுக்கேற்ற உள்ளடக்கத்துக்கான கட்டுரைப் பக்கத்தில் தோன்றும் விளம்பரதாரரான நிறுவனத்தின் தளத்திற்கான இணைப்புடன் கூடிய உரை காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்த உரையைச் சொடுக்கும் நிலையில் விளம்பரதாரரான நிறுவனத்தின் தளத்திற்கான பக்கம் பார்வைக்குக் கிடைக்கிறது.
இந்த உரையைச் சொடுக்குவதற்கேற்ப விளம்பரக் கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றன.
இதைச் சூழ்நிலைத் தேடல் முறை என்கின்றனர்.
விளம்பரதாரரான நிறுவனங்களின் இணைய முகவரியைத் தேடுபொறிகளில் சேர்த்துச் சுட்டுவதன் மூலம் விளம்பரதாரரின் தளத்திற்குப் பயன்பாட்டாளர்கள் செல்லும் வாய்ப்பு உறுதியளிக்கப்படுகிறது.
இதைச் செலுத்தப்பட்ட சேர்ப்பு முறை என்கின்றனர்.
தேடுபொறிகளில் விளம்பரதாரரான நிறுவனத்தின் தளத்தைத் தர வரிசையில் மேம்படுத்தி தேடுதல் பட்டியலின் தர வரிசையில் முன்னிலைப்படுத்திக் காண்பித்தலுக்காக விளம்பரக் கட்டணம் பெறப்படுகிறது. இதைத் தளத் தேர்வுமுறை என்கின்றனர்.
காட்சிப்படுத்தல் | விளம்பர பதாகை விளம்பரங்கள்
விளம்பரதாரராக இருக்கும் நிறுவனங்கள் தங்களது நிறுவனம் குறித்த இலச்சினை (Logo) அல்லது விளம்பரப் பதாகைகளை (Banners) ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தளங்களில் விளம்பரமாகக் குறிப்பிட்ட அளவில் காட்சிப்படுத்திட பணம் செலுத்துகின்றனர்.
இணையதளங்கள் தங்கள் தனத்தின் வடிவமைப்புக்கேற்ற வகையில் இந்த விளம்பரங்களுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்து காட்சிப்படுத்துகின்றனர்.
வகைப்படுத்தல் விளம்பரங்கள்
இணையதளங்களில் வெளியிடப்படும் குறிப்பிட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான பட்டியலில் விளம்பரதாரராக இருக்கும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி அல்லது சேவைகளைப் பட்டியலிடுவதற்குப் பணம் செலுத்துகின்றன.
உதாரணமாக, இப்பட்டியல்கள் வேலைவாய்ப்புப் பட்டியல், நில உடமைகள் வணிகப் பட்டியல், வாகனங்கள் பட்டியல், ஏலம் சார்ந்த பட்டியல்கள், மஞ்சள் பக்கங்கள் பட்டியல் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
இந்தப் பட்டியல்களில் தனித்துக் காட்டப்படும் வகையிலோ அல்லது அப்பட்டியலில் ஒன்றாகவோ இந்த விளம்பரங்கள் இடம் பெறுகின்றன.
கைபேசி விளம்பரங்கள்
பிளாக்பெர்ரி, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற திறன் பேசிச் சாதனங்கள் (Smart Phone). குறைந்த இறுதியில் கைபேசி அணுகும் திறன் கொண்ட சிறப்பியல்புத் தொலைபேசிகள் (Feature Phones), ஐபாட், டேப்லட் போன்ற ஊடகக் கைக்கணிளிக் சாதனங்கள், பொதுவான நிலையான அல்லது வனமிரு ஊடகக் காட்சி விளம்பரங்கள், உரைச் செய்தி விளம்பரங்கள், தேடல் விளம்பரங்கள், ஒலி / நிகழ்படங்களின் வழியாக உடனடிப் பணத்திற்கு விற்கப்படும் வணிகப் பொருட்கள், கைபேசித் தனங்களில் காட்சிப்படுத்தப்படும் குறிப்பிட்ட விளம்பரங்கள், கைபேசிப் பயன்பாடுகள், குறுந் தகவல் சேவை (SMS), பல்லுடகச் செய்திச் சேவைகள் (MMS) போன்ற உரை பேசிச் சேவைகள் மற்றும் கைபேசித் தேடல்கள் போன்றவை இந்த விளம்பரத்தின் கீழ் இடம் பெறுகின்றன.
முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Add a Comment