செப்டம்பர் 30 – மொழியாக்கத் திருநாள்
==================================
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்படயாத்தலொடு அனை மரபினவே
(தொல் : பொருள் : மரபியல் :98)
பௌத்த அறிவுக்களஞ்சியம் என்று அழைக்கப்படும்
The great learning temple என்ற மடாலயத்தில் 500க்கும் மேற்பட்ட துறவிகளின் முக்கியப்பணி பெளத்த சமய ஏடுகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்து பெரும்பான்மையான ஏடுகள் பாலி மொழியிலும் சில ஏடுகள் சமசுகிருதத்திலும் இருந்தன.
பௌத்த சமய சூத்திரங்களையும் அறநெறிகளையும் மொழியாக்கம் செய்ய ஒரு துறவிக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்படும்.
மொழிபெயர்த்த பிரதிகளை மூத்த துறவிகள் நுண்ணாய்வு செய்து,
அறிஞர் குழுவால் மூலப்படியையும் நுண்ணாய்ந்த படியுடன் ஒப்பீடு செய்யப்படும்.
முழுமையாகத் திருத்தம் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அந்த மொழிபெயர்ப்பை பிரதி
எடுப்பதற்கு நாற்பது துறவிகள் வேலை செய்வார்கள்.
பிறகு சீனாவில் இருக்கும் வெவ்வேறு மடாலயங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
இப்படி தங்கள் வாழ்நாள் தொண்டாக மொழிபெயர்ப்பை மேற்கொண்ட துறவிகளில் ஒருவர் தான் யுவான் சுவாங் ஆவார்….
இவரின் நினைவாக தைவானில் ஒரு திருக்கோயில் நிறுவப்பட்டுள்ளது.
இப்படித்தான் அறிவியல் படைப்புகளையும் அரபியில் இருந்து இலத்தீனுக்கு முனைப்பாக மொழிபெயர்த்தார்கள்.
இலத்தீன் பல்துறை அறிவுமொழியாக ஆனது
இப்படியான மொழிபெயர்ப்பாலும், அறிவுத்துறைகளில் பலர் உழைத்ததாலுமேயாகும்.
அறிவியலாளர் ஐசக்கு நியூட்டன் பிரித்தானியராக இருந்த பொழுதும் தன் படைப்பை இலத்தீனில் தான் எழுதினார்.
இதே போலவே இன்றளவும் ஆங்கிலம் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்த்துக்கொண்டே இருக்கின்றது.
ஆங்கிலத்திலேயே ஏராளமான அறிவிலக்கியம் படைக்கப்பட்டாலும், பல மொழிகளில் படைக்கப்படும் பல்துறை இலக்கியத்தை விடாது தொடர்ந்து மொழிபெயர்த்துக்கொண்டே இருக்கின்றது.
இதே போலத்தான் பிரான்சிய மொழியும்.
தமிழில் இவ்வகையான மொழியாக்க வள நுட்ப சேகரிப்பு மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
செம்மொழிப் புதையல்கள் இலக்கிய இலக்கண கவிதை கட்டுரை புதினம் நாடகம் திரைப்படம் மற்றும் அலுவல் மொழியாக்கங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வதோடு
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ஆண்டு தோறும் 10 சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளையும் நாளது வரை எண்பது மொழிபெயர்ப்பாளர்கள் விருது பெற்றுள்ளார்கள்.
ஜி யு போப் பெயரில் மொழிபெயர்ப்பு விருதும் நாளது வரை 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு பெருமிதமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மொழிபெயர்ப்பு வெற்றி பெற்று மொழிகள் என்ற
வேலிகளைத் தாண்டி மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு
மணமுண்டு என்ற பாங்கு வளர வேண்டும் ..
உலக மொழிபெயர்ப்பாளர்கள் கனவும் இதுதான்.
வாழ்க மொழிபெயர்ப்பாளர்கள்!
வளர்க மொழிபெயர்ப்புக் கலை!

Add a Comment