Arul.2009/FB/#6815
மலரும் நினைவுகள்!
வளரும் கனவுகள்!
காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழல, 1976ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 16ஆம் நாள், சனிக்கிழமை மாலைப் பொழுது கண்முன்னே வந்து நிழலாடுகிறது.
அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளியில் நான்காம் வகுப்புப் பயின்ற அந்தப் பாலப் பருவத்தில், ‘தாரகை இல்லத்தில்’ நடந்தேறிய என்னுடைய ஒன்பதாம் அகவைப் பிறந்தநாள் விழா, இன்றும் நெஞ்சில் பசுமையாக மலர்கிறது.
பெற்றோரின் அன்பு வாழ்த்துகள் மழையெனப் பொழிய,
என் வலது தோளாக அண்ணன் கண்ணனும், இடது தோளாகத் தம்பி பரதனும் அரணாக நிற்க, மகிழ்ச்சியின் உச்சத்தில் நான் பிறந்தநாள் கேக் வெட்டிய அந்தத் தருணம் எத்துணை அழகானது!
அன்பு நெஞ்சங்களான குசலாம்பிகை அத்தை, பாசமிகு தேன்மொழி அக்கா, பெரியம்மா மகன் முரளி ஆகிய உறவுகளும்,
அன்பு நண்பர்களாகிய இராமகிருஷ்ணன், இரகு, சூரஜ் ஆகியோரும் உடனிருக்க, விழாக் களைகட்டியது.
மேலும், அப்பாவோடு பணிபுரிந்த மதிப்பிற்குரிய அழகப்பன், சின்னண்ணா என்கிற நாராயணன், சேகர், தன்ராஜ் மற்றும் அப்பாவின் இனிய நண்பர் திரு.சோமு அவர்களோடு, எங்கள் வீட்டுச் செல்லப் பைரவர் ‘டாமி’யும் புடைசூழ, உறவும் நட்பும் சங்கமித்த அந்த நன்னாளினை ஒரு ஒளிப்படம் அப்படியே காலத்தை உறையச் செய்துள்ளது.
பல்லாண்டுகள் கடந்தும், அந்த இனிய நினைவுகளைச் சுமந்து நிற்கும் இந்தப் ஒளிப்படத்தை, அண்மையில் எனக்கு அனுப்பி வைத்து, என் கடந்த கால இனிமையான நினைவுகளை மீட்டெடுத்த திரு. சோமு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Add a Comment