Arul.2009/FB/#6808
அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மொழிபெயர்ப்பு நெறியாள்கை குழுவின் எட்டாவது கூட்டம்
11,12 நவம்பர் திங்களில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை சென்னை எழுமூர்த் தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் நடைபெற்றது
தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஔவை அருள் அவர்களின் தலைமையில் இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பங்களித்தோர் விவரம்
1.புலவர் செந்தலை கவுதமன்
2. முனைவர் வீ. அரசு
3.முனைவர் மு. வளர்மதி
4.திரு அ. மதிவாணன்
5.திரு.ப. சிவக்குமார்
பேரா. அரசு அவர்கள்,
அண்ணல் அம்பேத்கரின் மராத்தி மொழியில் நடத்திய இதழ்களின்
அச்சிட்ட தொகுப்பு நூலினை
மராத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெற்று அவற்றைக் குழுவின் பார்வைக்கு வைத்து அவை குறித்த மொழிபெயர்ப்பு, வெளியீட்டுத் திட்டம் பற்றி எடுத்துரைத்தார்.
அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மொழிபெயர்ப்பு 10 தொகுதிகள் முதல் கட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 13 1.2025 அன்று தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 17 தொகுதிகள் 14. 8.2025 அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு .பெ. சாமிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து மூன்றாம் கட்டமாக,
பொருளியல், அரசமைப்பு சட்டம், சட்டமன்றம் என்ற வகையில்
மொத்தம் 15 தொகுதிகளுக்கான மொழிபெயர்ப்பு மேலாய்வுப்பணி முடிந்து வெளியீட்டை எதிர்நோக்கி உள்ளன.
இவற்றுள் அம்பேத்கர் நடத்திய மராத்தி இதழ்களில் வெளிவந்த கடிதங்கள், அறிக்கைகள் மற்றும் பல பயனுள்ள பனுவல்கள தற்போது மராத்தியிலிருந்து நேரடியாக தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு தொகுதிகள் உள்ளிட்ட 58 தொகுதிகளுக்கான மொழிபெயர்ப்பு மற்றும் அச்சிடல் பணிகளை ஜனவரி திங்கள் 2026க்குள் நிறைவாக செய்து முடிக்க நெறியாள்கைக் குழு திட்டமிட்டுள்ளன.
இப்பணிகள் செவ்வையாகவும் விரைவாகவும் நடந்தேறி வருகின்றன.
அரசாணைப்படி, 2026 ஆம் ஆண்டுக்குள் அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மொத்தம் உள்ள
100 தொகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டு, மக்களிடையே அம்பேத்கர் எழுத்து, பேச்சு சார்ந்த உழைப்பின் வெளிச்சத்தைப் பாய்ச்சி அவர்களுக்கு அறிவு உரம் சேர்த்து, வாழ்வுணர்ச்சி காணும் வழிகாட்டியாய் அமையும்

Add a Comment