Arul.2009/FB/#6799
சிந்தை மகிழ்விக்கும் முத்தமிழைப்போல
மூன்று ஆய்வுக் கூட்டங்கள்!
ஒரே நாளில் 28.11.25 வெள்ளிக்கிழமையன்று
சென்னையில் அருகருகே அமைந்திருக்கும் அலுவலகங்களுக்கு மு.ப 11.15 மணியளவில் சாலைப் போக்குவரத்து நிறுவன அலுவலகத்திலும்
பி.ப 12.30 மணியளவில்
தமிழ்நாடு மாநிலச் சுகாதாரப் போக்குவரத்து இயக்கக
அலுவலகத்திலும்
மதியம் 1.30 மணியளவில்
தொழில்நுட்பக் கல்வி இயக்கக
அலுவலகத்திலும்
ஆட்சி மொழி ஆய்வுக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு தலைமை தாங்கி நுண்ணாய்ந்த ஆய்வறிக்கைகளை முறையே
சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் இயக்குநர் திருமதி இல. சியாமளா அவர்களிடமும்
தமிழ்நாடு மாநிலச் சுகாதாரப் போக்குவரத்து இயக்குநர் திரு. ச. நடராஜன் அவர்களிடமும்
தொழில்நுட்பக் கல்வி இயக்ககக் கூடுதல் இயக்குநர் திரு இ. மு. சீனிவாசன் அவர்களிடமும்
வழங்கி அவர்களின் அலுவலகப் பணியாளர்கள் முன்னிலையில் உரையாற்றி மகிழ்ந்தேன்.
மூன்று ஆய்வுக் கூட்டங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர்களான
திருமதி .க.சித்ரா
திருமதி பொ. பாரதி
திரு.பெ.இளங்கோ
மற்றும் புதிதாகப் பணியில் சேர்ந்த பயிற்சி உதவி இயக்குநர்களான
திரு.கு.சந்திரன் ,
திருமதி வே. ரேவதி ,
திருமதி .ந. நிலா
திரு. வே. மூர்த்தி ,
திருமதி .ம. ஜெகதீஸ்வரி ,
திருமதி சி. போதுமணி
திரு. பா. விஜய பாண்டியன் , திரு.ச.ந. விக்னேஷ் ,
திரு. தெ. சிவபிரகாஷ்,
திரு நீ. குறளரசர்
ஆகியோர் திறம்பட ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

Add a Comment