Arul.2009/FB/#6771
வாழ்ந்த பின்னும் வாழுகிறார் உரைவேந்தர் ஔவை துரைசாமி
_________________________________________
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட பேராசிரியர் சோ.ந .கந்தசாமி அவர்களின் உரைவேந்திரன் உரைமாட்சி நூலுக்கான திறனாய்வுப் பகுதி தினத்தந்தி, குமுதம், தினமணி,தமிழ் இந்து இதழ்களில் வெளிவந்த பதிவுக் களஞ்சியம்….
1 தினத்தந்தி
பக்கம் 8
நாள்: 02.09.2025
உரைவேந்தரின் உரைமாட்சி
தமிழில் புலமை மிக்கவரான அவ்வை துரைசாமிப்பிள்ளை, பழங்கால தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதிப் புகழ் பெற்றவர் என்பதால், உரைவேந்தர் என்று அழைக்கப்படுகிறார்.
ஐங்குறு நூலின் குறிஞ்சித் திணைப் பாடல்கள், சங்ககால தமிழ் மக்களின் இன்ப வாழ்வியலை விவரிக்கும் நற்றிணை மற்றும் சிலப்பதிகாரம் ஆகியவற்றுக்கு அவ்வை துரைசாமிப் பிள்ளை எத்தகைய தரத்துடன் உரை கண்டு இருக்கிறார் என்பது விளக்கப்பட்டுள்ளது.
இந்த நூல்களுக்கு மற்ற உரை ஆசிரியர்களின் கருத்து என்ன
என்பது கொடுக்கப்பட்டு, அவற்றில் இருந்து அவ்வை துரைசாமிப் பிள்ளையின் உரைகள் எவ்வாறு மேம்பட்டு இருக்கின்றன என்பதும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடலுக்கும் உரை எழுதும் முன்பு, அந்தப் பாடலைப் பாடிய புலவரைப் பற்றிய குறிப்பு களையும் அவர் எடுத்துரைத்து இருக்கும் சிறப்பு அம்சம் சுட்டிக்
காட்டப்பட்டு இருக்கிறது.
(ஆசிரியர்: பேராசிரியர் சோ.ந.கந்தசாமி;
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்;
விலை: ரூ. 120;
செல்போன்: 96000 21709
________________________________________
2 குமுதம்
10.9.2025
பக்கம் 86
உரைவேந்தரின் உரைமாட்சி
முனைவர் சோ.ந.கந்தசாமி
எல்லோராலும் தமிழில் உரை எழுதிட முடியாது.
அதில் பெரும்புகழ் கொண்டவர் ஔவை துரைசாமிப் பிள்ளை.
இந்தியாவில் உரை எழுதும் கலை முக்கியத்துவம் பெறத் தொடங்கிய காலத்தில் ஔவை துரைசாமி அவர்களின் தமிழுரை வித்தியாசமான வகைமையைக் கொண்டதாக இருந்துள்ளது.
தான் வாழும் காலத்தில் பதிற்றுப்பத்து, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களுக்கும்; ஐங்குறுநூறு, நற்றினை என்னும் அகப்பொருள் குறித்த இலக்கியங்களுக்கும் விரிவாகவும் விளக்கமாவும் தெளிவாகவும் வளம் சேர்த்திருக்கிறார்
ஔவை துரைசாமி.
‘பல்கலைக்கழகங்களில் இன்றைக்கு தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு உயர் கல்வி படிக்கிற மாணவர்கள், செய்யுள் வகை இலக்கியங்களைப் படித்தே ஆக வேண்டும்.
அவர்களுக்கு ஔவை துரைசாமிப் பிள்ளையின் உரை நூல்கள் பெரிதும் பயன்படுகின்றன என்கிறார், சோ.ந.கந்தசாமி.
வாழ்ந்த பின்னும் வாழ்கிறார், ஔவை துரைசாமிப் பிள்ளை.
வெளியீடு; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2ம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-113. பக்கம்; 137.
—————————————————————–
3 தினமணி
15.09.2025
பக்கம் 11
உரைவேந்தரின் உரைமாட்சி-
முனைவர் சோ.ந.கந்தசாமி;
பக்.147;
ரூ.120;
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600 113.
தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட செவ்வியல் இலக்கியங்கள் தோன்றிய
காலத்திலேயே அவற்றுக்குரிய
உரைகள் எழுதப்படாததற்குக்
காரணம், அக்கால மக்கள் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழறிவு கொண்டவர்களாக விளங்கினர்.
இளம்பூரணர் தான் தொல்காப்பியத்துக்கு உரை வரைந்து உரையாசிரியர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.
பதிற்றுப்பத்து, புறநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணைக்கு விளக்கமாக உரை எழுதிய சிறப்பைப் பெறுபவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி பிள்ளை.
இந்தத் திறனாய்வு நூலில் ஐங்குறுநூறு (மருதம்) உரைத்திறம் குறித்தும், இரண்டாம் பகுதி
நற்றிணைக்கும், மூன்றாம் பகுதி மணிமேகலைக்கும் உரைத்திறமாகவும், விளக்க உரை ஆய்வாகவும் விளங்குகிறது.
ஒளவை துரைசாமி பிள்ளை உரைகளின் மேன்மையை விளக்கும் விதமாக இந்த நூலை நூலாசிரியர் படைத்திருக்கிறார்.
ஐங்குறுநூறு பாடல்களுக்குப் பழைய உரையையும் ஒளவை துரைசாமி பிள்ளையின் உரையும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு, இரண்டையும் அறிந்து கொள்ளும் விதத்தில் அமையப்பெற்றுள்ளது.
நற்றிணை உரைத்திறத்தில் புலவர்கள் குறித்த குறிப்புகள், பாட வேறுபாடு, பாடலின் பொருண்மை, திணை விளக்கம் போன்றவை இடம்பெற்றுள்ளன.
மணிமேகலையின் பின் நான்கு காதைகளுக்கு ஒளவை துரைசாமி பிள்ளை எழுதிய உரைப்பகுதி பரந்த நூல் பயிற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
இறைவன் இலக்கணமும் நூற்பொருளும், தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை போன்ற தலைப்புகளில் இடம்பெற்றுள்ள விளக்கங்கள், ஆதாரங்கள் உரைத்திறத்துக்கு வலு சேர்க்கின்றன.
__________________________________________
4 இந்து தமிழ் திசை
11.10.2025
பக்கம் 6
உரைவேந்தரின் உரைமாட்சி
முனைவர் சோ.ந.கந்தசாமி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பதிற்றுப்பத்து, புறநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை மணிமேகலை ஆகிய நூல்களுக்கு விளக்கமான உரைகளை எழுதிய ஔவை சு.துரைசாமி பிள்ளையின் உரை நயம் விதந்தோதப்பட்டுள்ளது.
அண்ணாமலை, மலாயா, தமிழ்ப் பல்கலைக்கழகம் என பல பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய முதுபெரும் தமிழறிஞர் பேரா.சோ.ந.கந்தசாமியின் இலக்கிய ஆராய்ச்சி நூல்.

Add a Comment