POST: 2026-10-03T12:00:36+05:30

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் 4 பிரிவுகளில் 17
இருக்கைகளிலுள்ள 138 கோப்புகள் மற்றும் 40 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறையினர் ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 23.09.2026 புதன்கிழமை பிற்பகல் 03.30 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவலர் பெருமக்கள் முன்னிலையில்
இணையவழிப் பங்கேற்பின் அவசியம் குறித்தும், பொங்கிப் பெருகி வரும் தமிழ் வலைதளங்களைப் பாங்குறப் பயன்கொள்ளும் பான்மை குறித்தும் விவரித்தேன்.

கோப்புகளில் எழுதப்படும் வரைவுகளைப் பற்றியும் அவற்றை வண்ணமுறத் தீட்டும் உத்திகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தேன்.

‘பொறிகளை விரித்து வைத்துப் புதியன பொறித்து வைக்கும் புத்துணர்வோடு பணிசெய்வீர்; துறைக்கு அணிசெய்வீர் ’ எனப்பணித்து வந்தேன்.

‘வெற்றியின் நெற்றியில் எப்போதும் ஒளிரட்டும் இன்பத் தமிழ்’ என்று உரையாற்றித் திரும்பி வந்தேன்.

தொல்லியல் துறையின் இணை இயக்குநர் (பொ) முனைவர் வி.ப.யதீஸ்குமார், துணைஇயக்குநர்(நி)
திரு.வெ.சிவானந்தம்,
தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திருமதி ரா.சிவசங்கரி, கண்காணிப்பாளர் மு.சர்மிளாபானு ஆகியோர் நிழலாய் உடனிருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *