POST: 2026-10-02T12:24:43+05:30

நற்றமிழ்
தூயதமிழ் மாத இதழ்
செபுதம்பர் 2026(கன்னி)
பின்பக்க அட்டைப்பக்கம்

செந்தமிழை வென்றெடுத்த சீரியலாளன் ஒளவை!

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உரைவேந்தர் என்றுபுகழ்
ஒண்புலவர் ஔவை
துரைசாமி தோன்றியபின்
அன்றோ – நரைவாரும்
தெள்ளுதமிழ் நூல்களெல்லாம் தீந்தமிழாய்த் தித்திக்கக்
கொள்ளுமுயர் செம்பொருளைக் கொண்டு!

ஆரியத்தால் வேய்ந்த
அழிவுரைகள் மாய்ந்தொழிய
வீரியத்தால் செந்தமிழை வென்றெடுத்தார் சீரியத்தால்
ஒளவை துரைசாமி
ஆய்ந்துபல நூலுரைகள்
செவ்வியவாய் நேரியவாய்ச்
செய்து!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *