தமிழ் நிலம் உள்ளவரை பத்மஸ்ரீ. டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனாரின் 91 ஆம் பிறந்தநாள் நினைவாக( 24. 9. 1936 )
புகழ் நிலைத்திருக்கும்!
நாட்டு மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் எப்போதும் இடம் பிடித்து தலைமையான நிலைமை பெற்றிருப்பது ‘ தினத்தந்தி ‘ நாளிதழாகும்.
எளியோர் தமிழ்ப் பயில ஏணியாக விளங்கும் ஈடற்ற பெருமை கொண்டது ‘ தினத்தந்தி ‘.
எழுத்துக்கூட்டி படிக்க முயலும் தமிழ் மக்களுக்கேற்ற எளிய நடையில் உலகத்தின் செய்திகளை ஊட்ட முடியும் என்ற நிலையை நிறுவியதோடு, இன்று கோடி மக்களின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டிருக்கும் ஒப்பற்ற தாளாக ‘ தினத்தந்தி ’ திகழ்கிறது.
தமிழர் தலைவர் ‘ தினத்தந்தியை வளர்த்தார்.
செம்மனத்துச் செம்மல் சிவந்தி ஆதித்தனார் செழிக்க வைத்து என்றென்றும் தமிழர்களின் நினைவில் உள்ளார்.
அருமை இளவல் சி.பாலசுப்பிரமணியன் இப்போது செழிப்புக்கு மேலும் சிறப்பும் மெருகுமூட்டி நாளும் ‘
தினத்தந்தியில் மாற்றங்களைக் கொழிக்க வைத்திருக்கிறார்.
அண்ணல் சிவந்தியை தொடர்ந்து சிகரத்தைத் தொடும் அன்பு இளவல் சி.பாலசுப்பிரமணியன், உறவு வளர்ப்பதில் முதன்மை பெற்றிருக்கிறார்.
அண்ணலின் புகழ் தமிழ் நிலம் உள்ள வரை நிலைத்திருக்கும்.
சாதனைச் செம்மல் சிவந்தி ஆதித்தனார் புகழ் நாளும் ஓங்குக.

Add a Comment