POST: 2026-09-19T11:01:19+05:30

தினமணி – 16. 09. 2026
பக்கம் எண்: 12

தள்ளுபடி விலையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள்

சென்னை, செப். 15:
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூல்களை அக்.14 வரை சலுகை விலையில் பெறலாம் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந. அருள் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந.அருள் கலந்துகொண்டு நிறு வன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து நிறுவன இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந.அருள் கூறியதாவது:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிஞர் கே.கே. பிள்ளையின் தமிழக வரலாற்று நூல், தமிழ் வளர்ச்சித் துறையால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள பல அறிஞர்களின் நூல்கள், இராகவையங்கார் போன்றோர் எழுதிய தமிழக வரலாற்று நூல்கள், தமிழ் மொழி வரலாற்று நூல்கள், இராமலிங்க சுவாமி, வேதாத்திரி மகரிஷி போன்றோர் தொடர் பான தத்துவ நூல்கள், இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்கான கருவி நூல்கள் (தமிழில்), பல தொகுதிகளில் நன்னூல் உரைவளம் போன்ற பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நூல்களுக்கு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்.15 முதல் அக்.14-ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்துக்கு மொத்த விலையிலிருந்து 30 சதவீத கழிவு வழங்கப்படவுள்ளது.

அதேவேளையில் சில குறிப்பிட்ட நூல்களுக்கு 50 சதவீதம் வரை கழிவு வழங்கப்படுகிறது.

நூல் விற்பனை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் நேரடியாக நடை பெறும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி பேராசிரியர்கள், ஆய்வு மாணவர் கள்,தமிழார்வலர்கள், பொதுமக்கள் சலுகை விலையில் நூல்களை வாங்கி பயன் பெறலாம் என்றார் அவர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *