தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள்
“தொண்டில் பழுத்த பழம்,
தூய தாடி மார்பில் விழும்,
மண்டைச் சுரைப்பை உலகு தொழும்,
இவர் மனக்குகையில் சிறுத்தை எழும்”
என்று பாவேந்தர், வெண்தாடி வேந்தரை பாடிப் பரவியது நம் நினைவில் எப்பொழுதும் கமழ்வதாகும்.
சமூக நீதி நாள் உறுதிமொழி
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் –
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய
செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனித அபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்
சமூக நீதியை ரே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம்
அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!

Add a Comment