ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்
தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநரகத்தின் 19 பிரிவுகளிலுள்ள 4999 கோப்புகள் மற்றும் பதினாறு பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் இரண்டு நாள்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 02/09/2026 புதன்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவலர் பெருமக்கள் முன்னிலையில் பொங்கிப் பெருகி வரும் தமிழ் வலைதளங்களைப் பாங்குறப் பயன்கொள்ளும் பான்மை குறித்தும் அலுவலகக் கோப்புகளில் எழுதப்படும் வரைவுகளைப் பற்றியும் அவற்றை வண்ணமுறத் தீட்டும் உத்திகளைக் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தேன்
‘பொறிகளை விரித்து வைத்துப் புதியன பொறித்து வைக்கும் புத்துணர்வோடு பணிசெய்வீர்; துறைக்கு அணிசெய்வீர் ’ என வலியுறுத்தினேன்.
‘வெற்றியின் நெற்றியில் எப்போதும் ஒளிரட்டும் இன்பத்தமிழ்’ என்று உரையாற்றி சிறப்பாக கோப்புகளை வரைந்த அலுவல் பணியாளர்களைப் பாராட்டி மகிழ்ந்தேன்.
ஆதி திராவிடர் நல இணை இயக்குநர் திருமதி திபா.பூங்கொடி, துணை
இயக்குநர் திரு. வே.தியாகராஜன் மற்றும் திருவள்ளூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி வே. ரேவதி, கண்காணிப்பாளர் திருமதி பி. வசந்தகுமாரி மற்றும் உதவியாளர் திருமதி மு. கற்பகவள்ளி ஆகியோர் உடன் இருந்தனர்.

Add a Comment