POST: 2026-08-29T10:16:55+05:30

”
Arul.2009/FB/#69071

ஷேக்ஸ்பியர் வரிசை 10

ஹாம்லெட் நாடகக் கதை

முதற் பதிப்பு: 1956.

விலை ரூ.2-0-0.

புத்தகம் கிடைக்குமிடம்:

தி.நா.கிருபேந்திரபாபு, B.Sc., (Hons.),
விரிவுரையாளர்,
செந்தில்குமார நாடார் கல்லூரி,
விருதுநகர்.

முன்னுரை.

ஆங்கில நாவலாசிரியர் மெரிடித் என்பார் ” தற்புகழ்ச்சிக்காரன் ” என்றொரு நூலை எழுதி வெளியிட்டார்.

அது வெளிவந்தவுடனே அதனைப் படித்துணர்ந்த அவரின் நண்பனொருவன் ஓடோடி வந்து ஆசிரியரிடம், ” ஐயா. என்னைப்பற்றி இவ்வளவு தூரம் வன்மையாக, வெளிப்படையாக எழுதலாமா ? ” என வினவினானாம்.

இதைக் கேட்ட ஆசிரியர் புன்முறுவலித்து, ” நண்பனே இந்தக் கதையிலே வரும் தலைவனின் குணநலன்கள் உன்னிடம் மட்டும் இருப்பவையாகக் கருதுதல் வேண்டாம் –

நம் எல்லோரிடமுமே இருக்கின்றன – ஆதலின் அவதியுறல் வேண்டாம் ! ” எனக் கூறினாராம்.

இதே குறிப்பு உலக மேதை எனக் குறிக்கப்படும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலே முதன்மையானதொரு இடத்தைப் பெற்றுள்ள ‘ஹாம்லெட் ” என்னும் நாடகத்துக்கும் பொருந்தும்.

நாடகக் கதைத் தலைவன் டென்மார்க் இளவரசன் ஹாம்லெட்.

இவன் குணநலன்கள் நம் ஒவ்வொருவருடைய குணநலன்களையும் ஒருவாறு ஒப்பு நோக்க இருக்கும் தன்மைத்தாக இருக்கிறது.

அவ்வளவு தொலைவிற்கு ஒரு நாடகத்தலைவனைப் படைத்தப் பெருமை ஷேக்ஸ்பியருக்குண்டு !

அந்தப் பெருமை மிகுந்த ” ஹாம்லெட் ” நாடகத்தைத் தமிழில் தர ஓரளவு முயற்சித்திருக்கிறேன்.

இம்மொழிபெயர்ப்பிலே பிழைகள் தென்படலாம்.

அவற்றினைப் படிப்போர் உளங்கொளார் என்ற நம்பிக்கையிலே இதனைத் தமிழ் உலகிற்குப் படைக்கிறேன்.

இந்த முயற்சியிலே என்னைப் பெரிதும் ஊக்குவித்து இது வெளிவரப் பலவகையிலும் உதவிய அன்பர் புலவர் க. திருமாறன், B.O.L., அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நாடகத்தை அழகிய முறையிலே அச்சிட்டுதவிய “தமிழ்த்தென்றல் ” அச்சகத்தாருக்கு என் உளங்கனிந்த நன்றி .

– தி.நா.கிருபேந்திரபாபு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *