”
Arul.2009/FB/#69062
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேணப்படும் 34 கோப்புகள் மற்றும் 48 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறையினர் ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 17.08.2026 திங்கட்கிழமை காலை 11:30 மணியளவில் ஆய்வு மேற்கொண்டேன்.
துறையின் அலுவலர் பெருமக்கள் முன்னிலையில் இணையவழிப் பங்கேற்பின் அவசியம் குறித்தும், பொங்கிப் பெருகி வரும் தமிழ் வலைதளங்களைப் பாங்குறப் பயன்கொள்ளும் பான்மை குறித்தும் விவரித்தேன்.
கோப்புகளில் எழுதப்படும் வரைவுகளைப் பற்றியும் அவற்றை வண்ணமுறத் தீட்டும் உத்திகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தேன்.
‘பொறிகளை விரித்து வைத்துப் புதியன பொறித்து வைக்கும் புத்துணர்வோடு பணிசெய்வீர்; துறைக்கு அணிசெய்வீர் ’ எனப்பணித்து வந்தேன்.
‘வெற்றியின் நெற்றியில் எப்போதும் ஒளிரட்டும் இன்பத் தமிழ்’ என்று உரையாற்றித் திரும்பி வந்தேன்!
நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநர் திரு. கோபிநாத் ஸ்டாலின்,
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திரு. விக்னேஷ், கண்காணிப்பாளர் திருமதி வசந்தகுமாரி ஆகியோர் உடனிருந்து உவகை கொண்டனர்

Add a Comment