”
Arul.2009/FB/#69050
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தின்
25 பிரிவுகளில் உள்ள 4246 கோப்புகள் மற்றும் 167 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 06.08.2026 பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதனை அலுவலகத்தில் எளிமையாகவும் சிறப்பாகவும் எவ்வாறு செயலாற்றுவது என்பது குறித்தும்
இணையத்தின் இனிமை பொங்கும் தமிழ் வலைதளங்களை விவரித்தும்
வரைவுகளைப்பற்றியும் விளக்கமாக இயம்பியதோடு விழிகளை விரித்தே காண்பீர் வெற்றியின் நெற்றியில் தமிழே! என்றும் வாழ்க இணையம் என்று
துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
துறையின் துணை ஆணையர்
திருமதி தங்கம்
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, கண்காணிப்பாளர் திருமதி க.மலையரசி, உதவியாளர் திரு. ஜெ. உதயரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Add a Comment