POST: 2026-08-06T09:37:38+05:30

”
Arul.2009/FB/#69048

ஷேக்ஸ்பியர் வரிசை 7

சேக்சுபியர் நாடகக்கதைகள்

நூற்செய்தி

முதற் பதிப்பாண்டு : 2001

நூலுரை

சேக்சுபியர் உலகறிந்த மகாகவி என்பதும், மாபெரும் நாடகப் புலவர் என்பதும் வாழ்வியக்கத்தின் பன்முகச் சிந்தனையாளர் என்பதும் நானிலம் அறிந்ததே.

அவர்தம் நாடகங்கள் நவில்தொறும், காண்டொறும் வாழ்வின் உண்மைகளை உணர்த்துவன.

சேக்சுபியரை வையத்து மொழிகள் அறிந்தது போல் செந்தமிழ்ச் சிறுவர்களும் அறிந்திட அறிஞர் பெருந்தகை பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் இதனை சார்லசுலேம் என்பார் உரைநடையைப் பின்பற்றித் தழுவி எழுதிய கதைகளே இவை.

இவை பதிப்பிக்கப்பட்டு அரை நூற்றாண்டாயின.

மீண்டும் இதனை இன்பியல் நாடகக்கதைகள், துன்பியல் நாடகக் கதைகள், வரலாற்று நாடகக் கதைகள் என வெளியிடகின்றோம்.

அறிஞர் பெருந்துணையோடு ஐம்பது ஆண்டுகாலம் பழகிய உரிமையாலும், அண்மையில் தமிழ்நாடு அரசு
கா. அப்பாத்துரையார் நூல்களை நாட்டுடைமை ஆக்கிமையாகும்.

இம் மூன்று நூல்களையும் மாணவர்களும், பொது மக்களும் பயனுற வெளியிடுகிறோம்.

கற்றனைத்தூறும் அறிவு.

அன்பன்
த.கோவேந்தன்.

1.விரும்பிய வண்ணமே
2.வெனிஸ் வணிகன்
3.புயற் காற்று’
4.நடுவேனிற் கனவு
5.சிம்பலின்
6.கார்காலக் கதை
7.பன்னிரெண்டாம் இரவு
8.சிறு பிழையால் நேர்ந்த பெருந் தொல்லை
9.சரிக்குச் சரி
10.நன்கு முடிவுறின் நலமே அனைத்தும்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *