POST: 2026-08-02T11:28:48+05:30

”
Arul.2009/FB/#69044

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

எழிலக வளாகத்திலுள்ள வேளாண்மை இயக்ககத்தின் 50 பிரிவுகளில் உள்ள 11,017 கோப்புகள் மற்றும் 874 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மற்றும் உதவியாளர்கள் வாயிலாக குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 30.07.2026 வியாழக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதனை வேளாண்மை இயக்ககத்தில் எவ்வாறு எளிமையாகவும், சிறப்பாகவும் செயலாற்றுவது என்பது குறித்தும்
இணையவுலகில் கணினித்தமிழ் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று பற்பல சான்றுகளோடும் இனிமை பொங்கும் தமிழ் வலைதளங்களைத் குறித்தும் விவரித்ததோடு அலுவலக வரைவுகளைப் பற்றியும் விளக்கமாக இயம்பினேன்.

விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே! என்று வலியுறுத்தினேன்.

பொற்குடத்திற்கு பொட்டு வைத்தது போல வேளாண்மை இயக்ககத்தின்
இயக்குநர் முனைவர் க.வீ. முரளிதரன் இ.ஆ.ப., அவர்களும் யானும் சென்னை மாநிலக்கல்லூரியில் ஒரு சாலை மாணாக்கர் என்றும் நூற்றாண்டு நாயகர் கவியரசர் கண்ணதாசனின் நூற்றுக்கணக்கான பாடல்களையும் அவரின் நுட்பமான சிந்தனைக் கருத்துக்களையும் உலகெங்கும் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் முனைவர் முரளிதரன் என்று பெருமிதத்தோடு அவையில் குறிப்பிட்டு மகிழ்ந்தேன்.

கூட்டத்தில் வேளாண்மை இயக்ககத்தின் துணை இயக்குநர் திரு. தமிழ்ச்செல்வன், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி ந. நிலா, உதவியாளர்கள் திருமதி சி. சுகன்யா மற்றும் திருமதி அ. விஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *