”
Arul.2009/FB/#69039
ஷேக்ஸ்பியர் வரிசை – 6
ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
49 ஆண்டுகளுக்கு முன்பு
முதற் பதிப்பின் முன்னுரை :
மூவேந்தர் அச்சகம்
முதற் பதிப்பு : ஜூன் 1977 – டிசம்பர்
இரண்டாம் பதிப்பு : 1991 – ஏப்ரல்
மூன்றாம் பதிப்பு : 1991 – மே
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அனைத்தையும் மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சியில் இதுவரை ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளேன். இப்பொழுது ஆறாவது நூலாக இதனை வெளியிடுகிறேன்.
இந்த நூலை மொழிபெயர்ப்பதில் எனக்கு ஒரு தனி ஆர்வம் உண்டு.
ஏனெனில் கடலுக்குள் மிதக்கும் வெனிஸ் நகர் என் கண்ணுக்குள் இருக்கிறது.
1974 ஆம் ஆண்டில் என் ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தின்போது 15.5.1974 அன்று வெனிசு நகரத்தை நான் கண்ணுற்று வியந்தேன்.
குடியாட்சி நகராக உயர்ந்து உலகத்தின் ஒப்பற்ற வாணிபத் துறைமுகமாக விளங்கிய வெனிசு, இன்றும் அதன் மகத்துவம் குறையாமல் நிற்கிறது.
வெனிசை ஆண்ட சிற்றரசர்கள் ” டவ்ஜ் * ( Doge ) என்று அழைக்கப்பட்டனர்.
அவர்களது அரண்மனை ( Doge’s Palace ) உலகத்தின் ஒப்பற்ற கட்டடங்களில் ஒன்றாகும்.
அது நம் தாஜ்மகாலுக்கு நிகரானது எனலாம்.
அங்குள்ள செனட் மண்டபம், நீதி மன்றம், சிறைக்கூடம் ஆகியன எல்லாம் இந்த நாடகத்தோடு தொடர்புடையன.
அங்கு நடந்த விசாரணையாக ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கும் நீதிமன்றக் காட்சி ஓர் அற்புத இலக்கியப் படைப்பாகும்.
தெவிட்டாத இந்த நூலைத் தீந்தமிழ்த் தாயின் திருவடிகளில் பணிந்து படைக்கிறேன்.
123, முத்துப்பட்டணம் :
மூன்றாம் தெரு,
காரைக்குடி.
அன்புசால்,
அரு.சோமசுந்தரன்
1.12.1977 ( அருசோ )

Add a Comment