”
Arul.2009/FB/#69023
கலைமகள் – ஜுலை மாத இதழ்
(1.7.2026)
பக்கம் எண் : 39,40,41
ஊற்றின் எழுச்சி
முனைவர் ந அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித்துறை
ஊற்றின் எழுச்சி
நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பதற்கேற்ப கவிஞர் தாகூர் குடும்பத்தையே தனிநிலை பல்கலைக்கழகம் என்று பெருமிதத்தோடு கூறலாம்.
அத்தகைய ஒரு கலைக்கழகமாக தாகூர் குடும்பமும் திகழ்ந்தது.
தாகூரின் தந்தை தேவேந்திரநாத் வீட்டில் எப்போதும் அறிஞர்களோடு அளவளாவிக் கொண்டு இருப்பார்கள்.
இரவீந்திரரின் பெரிய அண்ணன் பல்கலையில் வல்லவர்.
அவருடைய தத்துவமான வித்தகமும், கணக்கியலறிவும் இரவீந்திரரைப் பெரிதும் ஈர்த்தன!
அதே நேரத்தில் வங்க மொழியில் பாடல் எழுதுவதில் மிகச் சிறப்பானவர்.
அவர் தனது தம்பி இரவீந்திர்ருக்கு நீச்சல் கலையைக் கற்றுக் கொடுத்தார்.
பிரம்ம சமாஜம் எனும் ஓர் அமைப்பை உருவாக்கிய சான்றோர் குடும்பமாகும்.
இந்து மதத்திலே உள்ள மூடப்பழக்க வழக்கங்களை அகற்றி மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தவதற்காக அமைந்த ஒரு சீர்திருத்த அமைப்பாகும்.
பல தெய்வ உருவ வழிபாடுகளை எதிர்த்தும், ஒன்றே தேவன் என்பதை ஆதரித்தும் உருவான அமைப்பு தான் பிரம்ம சமாஜம்!
அமைதிக்கோட்டமாக சாந்தி நிகேதனை போல்பூரில் கலைக் கோயிலாக கல்விக் கோட்டம் உலகத்திற்கு வித்திட்டவர் ஹேமேந்திரநாத் ஆவார்.
ஹேமேந்திரநாத் தாகூர் (1844–1884), பாரத தேசத்தின் பண்பாட்டு விழுமியத்தை நோக்கி மெய்யியல் கருத்துக்களை ஓசையின்றி செதுக்கிய சிற்பியாவார்.
ஞானத் தேடலில் நெருப்பாகவும், தனிமனித ஒழுக்கத்திலும்,சமூக ஒழுக்கத்திலும் தூய பனித்துளியாகவும் திகழ்ந்த அவரது மனம் முரண்படு மெய்மையின் பிறப்பிடமாக இருந்தது.
அவர் தீவிர பிரம்மோ சீர்திருத்தவாதியான தேவேந்திரநாத் தாகூரின் மகனும் இரவீந்திரநாத் தாகூரின் மூத்த அண்ணன் ஆவார்.
உலகம், இரவீந்திரநாத் தாகூரின் கவிதையை சித்தார் இசைக்கருவியைப் போன்று இசைத்துக் கொண்டிருந்த போது, ஹேமேந்திரநாத், மீமெய்யியலைக் கொண்டு நவீனத்துவத்தின் கட்டுமானத்தை வடிவமைத்தவராவார்.
இரவீந்திரநாத்தின் வரிகளிலேயே கூறுவதானால், என் அண்ணன் ஹேமேந்திரநாத்
“ஒரு பேரரசர் போல” இருந்தார் – தாழ்வாரத்தில் ஒலிக்கும் அவரது காலடிச் சத்தம், பணியாளர்களைப் பதற வைக்கும்.
ஹேமேந்திரநாத் தான் இரவீந்திரநாத்தின் தொடக்க காலப் பாடத் திட்டத்தை ஆழமாக வடிவமைத்தவர்.
காலையில் கணிதம், பிற்பகலில் கவிதை, மாலையில் இசை.
ஆங்கிலம், வங்காளம், வடமொழி, உடற்பயிற்சி, அளவியல் மற்றும் கட்டுமானம் என அனைத்தும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
இரவீந்திரநாத்தை மலர்ந்த தோட்டமாக மாற்றியதோடு ஒழுக்கத்தை விதைத்து, ஒளியை உறுதி செய்தவர் ஹேமேந்திரநாத் தான்.
பிறப்பால் மட்டுமல்ல, பயிற்சியால் மேதைகள் உருவாக்கப்படலாம் என்கிற கருத்தின் அடிப்படையில் ஹேமேந்திரநாத் ஐரோப்பிய நாடுகள் கனவு கூடக்காணாத ஈத்தர் என்கிற (மின் காந்த அலைகளுக்கான ஊடுபொருள்) மற்றும் ஆற்றல் விதிகள் குறித்து வங்காள மொழியில் முதன்முதலாக இயற்பியலைக் குறித்து எழுதிய பேரறிஞர் எனலாம்.
உருவகத்தால் கட்டமைக்கப்பட்ட மொழியில் எழுதப்பட்ட அவரது இயற்பியல் கையெழுத்துப் பிரதிகள் இந்தியாவில் அறிவியல் கற்பனையை காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் முதல் தீவிர முயற்சி என்றும் கூறலாம்.
19 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஒரு மனிதன் எண்ணெய் விளக்கின் ஒளியில் ஆங்கிலம் அல்லாத, பேரரசின் மொழி அல்லாத, ஆனால் பிரார்த்தனை, துயரம் மற்றும் புரட்சியின் மொழியான வங்க மொழியில் இயற்பியல் நூல்கள் எழுதியது வியப்பிலும் வியப்பே.
1867 மற்றும் 1873 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஹேமேந்திரநாத் மின்காந்த அலைகள் மற்றும் ஒளியியல் மாறுபாடு ஆகியவற்றின் தன்மை குறித்து செய்முறை சோதனைகளை மேற்கொண்டார், அவை பரவலாகப் பகிரப்பட்டிருந்தால், அலைக் கோட்பாட்டில் ஐரோப்பிய படைப்புகளுக்கு முந்தையதாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவரது அறிவியல் நோக்கங்கள் அவரது காலத்தில் அசாதாரணமானவையாக இருந்தன.
ஜோராசங்கோவில் உள்ள அவரது மூதாதையர் வீட்டுச் சுவர்களுக்குள் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளைக் கற்றதோடு ஹேமேந்திரநாத் வீட்டுப் பொருட்களிலிருந்து கருவிகளை உருவாக்கினார் அல்லது மறுபயன்பாடு செய்தார்.
கண்ணாடிகள், லென்ஸ்கள், காந்தங்கள் மற்றும் ஊசல்களைப் பயன்படுத்தி ஒளியியல், மின்காந்தவியல் மற்றும் இயற்பியல் விசைகள் குறித்தும் அவர் சோதனைகளை நடத்தினார்.
அவர் அனுபவ வழிமுறைகளுடன் தர்க்க ரீதியான சிந்தனையையும் இணைத்தார் – இது ஆரம்பகால இயற்கை தத்துவஞானிகளை ஒத்த ஒரு முறையாகும்.
அவர் கண்டுபிடிப்புகளை கவனமாகப் பதிவுசெய்து தொகுத்தார்.
அவர் அறிவியலை தனது உடன் பிறந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரும்பாலும் நேரடி விளக்கங்கள் வாயிலாகக் கற்பித்தார்.
அவரது வீட்டில் கல்வி ஒரு பகுதி பாடம், ஒரு பகுதி நிகழச்சி, ஒரு பகுதி வெளிப்பாடு என நடைமுறை சார்ந்ததாக இருந்தது.
அறிவியல் என்பது ஆங்கிலப் பேரரசின் தனிப்பட்ட சொத்தல்ல என்பதை அவர் நிரூபித்தார் –
1874 ஆம் ஆண்டில் எழுதி முடிக்கப்பட்ட அவரது மிக முக்கியமான அறிவுசார் கலைப் படைப்பான, இயற்கை அறிவியலின் அடிப்படைக் கொள்கைகள், இந்திய மொழிகளில் எழுதப்பட்ட முதல் முக்கிய அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றாகும்.
இந்தியர்களின் மனநிலை, ஐரோப்பிய பழக்கவழக்க நடைமுறைகளைப் பின்பற்றுவதன் வாயிலாக அல்லாமல் மாறாக அறிவியல் சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படையில் முழுமையாக புரிந்துகொள்வதன் வாயிலாக அறிவியலை மீட்டெடுக்க முடியும் என்று அவர் நம்பினார்.
அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் ரிதேந்திரநாத் தாகூர் அவரது அறிவுசார் மரபைப் பாதுகாக்கும் நோக்கில் 1911 ஆம் ஆண்டில் ஹேம்ஜோதி என்ற தலைப்பில் அவரது படைப்புகளின் தொகுப்பைத் தொகுத்து வெளியிட்டார்,
அவர் தனது மகள்களுக்கு இசை அல்லது நல்ல பழக்கவழக்கங்களை மட்டுமல்ல, கணிதத்தையும் கற்பித்தார்.
கல்வி என்பது வாழ்க்கைக்கு நம்மை தயார்படுத்திக் கொள்வதல்ல என்பதை ஹேமேந்திரநாத் நம்பினார் –
நியூட்டனின் விதிகளைப் பற்றி விவாதிக்கவும், கவிஞர் கதேவை மொழிபெயர்க்கவும் அல்லது இயற்கணித சிக்கல்களைத் தீர்க்கவும் அவர்கள் திறமை பெற்றவர்களாக இருந்தனர்.
ஹேமேந்திரநாத்தைப் பொறுத்தவரை, பெண்களின் கல்வி என்பது தொண்டு அல்லது முன்னேற்றத்தைப் பற்றியது அல்ல – அது ஒரு மனோதத்துவத் தேவை.
1870 இல் ஒரு இளம் வங்காளப் பெண், காலையில் டெஸ்கார்ட்ஸை ஓதி, மதியம் சமய நூல்களின் நல்லுரைகளை உச்சரிப்பதாக கற்பனை செய்து பாருங்கள்.
நம் இல்லத்தின் ஒவ்வொரு அறையும் ஒரு கருத்தியல் காட்சி.
உணவு மேசை ஒரு கருத்தரங்க மேடையாக மாறியது.
இசைப் பயிற்சி அறிவாற்றல் பயிற்சியாக உருவானது.
சமையல் வேதியியல் கோட்பாட்டுடன் கலந்திருந்தது.
ஒரு தலைமுறை பெண்களை அறிவுசார்ந்த குடும்பத் தலைவிகளாகவும் இனி வருங்காலங்களில் கவிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் குழந்தைகளை உருவாக்கும் தாய்மார்களாகவும் விளக்கப் பேருரை வழியாக அன்றி, அறிவின் அமைதியான அதிகாரம் வாயிலாக அவர் உருவாக்கினார்.
மல்யுத்தம், யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சிகள், ஜூடோ மற்றும் நிஞ்சிட்சு போன்ற தற்காப்புப் பயிற்சிகளையும் அவர் அறிமுகப்படுத்தினார் .
உளவியல் ரீதியாக மறுசீரமைக்கும் செயல்பாடாகும்.
இராஜா ராம் மோகன் ராய் அவர்களால் நிறுவப்பட்ட பிரம்ம சமாஜம், ஹேமேந்திரநாத் தாகூர் அவர்களால்தான் முன்னெடுத்து செல்லப்பட்டது.
ஆனால் பிரம்ம சமாஜத்தை இறையியலில் இருந்து நடைமுறைக்கு மாற்றியவர் ஹேமேந்திரநாத் ஆவார்.
அந்த சமாஜத்தின் /அமைப்பின் ஆதரவாளர்கள் எவ்வாறு இறைவழிபாடு செய்ய வேண்டும், திருமணம் செய்ய வேண்டும், துக்கம் துய்க்க வேண்டும் என்றும், எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் அவர் வடிவமைத்தார்.
1870ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிரம்ம நெறிகளை அவர் இயற்றினார்.
இன்று, இந்தியாவிலும், வங்காளதேசம் முழுவதிலும் 8 மில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்கள் அமைதியான புரட்சியின் வாயிலாக ஹேமேந்திரநாத்தால் கட்டமைக்கப்பட்ட வழியில் தங்கள் சடங்கு வழிபாட்டு மரபை பின்பற்றுகிறார்கள்.
நுண்ணறிவுள்ள மேதைகள் தம்மை சந்தைப்படுத்தத் தொடங்கிய ஒரு காலகட்டத்தில் ஹேமேந்திரநாத் ஒழுங்குமுறைக்குள் தன்னை பிணைத்துக் கொண்டார்.
அவர் கவிஞர் அல்லர். ஆனால் கவிதை மெருகேற காரணமாக இருந்தவர்.
ஹேமேந்திரநாத்தின் தொலைநோக்குப் பார்வை தெளிவான, நம்பிக்கையான மாற்றத்திற்கு வழிவகுத்தது.
ஆன்மீக வளர்ச்சியின் ஒரு பகுதியாக யோகா மற்றும் உடற்கல்வியை அவர் அறிமுகப்படுத்தியது மேற்கத்திய நாடுகள் “மனம்-உடல்” சார்ந்த ஒருங்கிணைப்புகளில் ஈர்க்கப்படுவதற்கு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது ஆகும் .
1875 ஆம் ஆண்டில், மிகவும் இளைஞரான இரவீந்திரநாத் அவரின் 14 ஆம் வயதில் (இந்து மேளாவிற்கு பரிசு) பேரணி கவிதை தொகுப்பை இயற்றினார்.
அதற்கு உயிர் கொடுத்தவர் ஹேமேந்திரநாத் தான்.
அவர் தாகூரின் கவிதைகளுக்கு அச்சாணியாக இருந்தார்.
கவிதை உலகிற்கும் பொது சமூகத்திற்கும் இடையிலான பாலமாக அவர் திகழ்ந்தார்.
மருத்துவப் படிப்பைக் கைவிட்ட பிறகு, ஹேமேந்திரநாத் தாகூர் இல்லத்திற்குள் ஒரு தனிமனித பல்கலைக்கழகமாக மாறினார்.
ஜோதிரிந்திரநாத், சோமேந்திரநாத், இரவீந்திரநாத், ஸ்வர்ணகுமாரி, ஞானநந்தினி தேவி ஆகிய – அனைவரும் அவரது கற்பித்தல் முறைகளைக் கடந்து சென்றனர்.
வங்காள மொழியை பேரரசின் மொழித் தாக்கத்திலிருந்து பாதுகாத்த மைக்கேல் மதுசூதனின் புத்தகங்களை, இரவீந்திரநாத்தை படிக்க வைத்தது ஹேமேந்திரநாத் தான்.
ஹேமேந்திரநாத் தாகூர் வையம் புகழ் ஞானச்சுவடி ஆவார்.
நாம் ஏன் அவரை இப்போது நினைவில் கொள்ள வேண்டும்?
ஏனென்றால், கல்வி சந்தைப்படுத்தப்பட்டு திணறுகின்ற இந்தக் காலக்கட்டத்தில், ஹேமேந்திரநாத், “பாடத்திட்டத்திலுள்ளவற்றை மட்டுமல்ல, ஆன்மாவிற்கு கற்றுத்தர வேண்டியவற்றையும் கற்றுக்கொடுங்கள்” என்று கூறுகிறார்.
ஹேமேந்திரநாத் தாகூரை நினைவில் கொள்வது என்பது, வாழ்வின் நுண்மியங்கள் அழிந்து வருவதை எதிர்த்து போராடுவதைக் குறிக்கும்.

Add a Comment