”
Arul.2009/FB/#69022
https://www.facebook.com/share/r/1YPHf7RG4P/
மாண்புமிகு அமைச்சர் அவர்களின் முகநூலில் இருந்து பெறப்பட்ட தகவல்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
வாய்மையே வெல்லும்
தமிழ் வளர்ச்சித் துறை
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா
பிறந்தநாள் விழா – அழைப்பிதழ்
நாள் : 09.07.2026, வியாழக்கிழமை
நேரம் : காலை 10.30 மணி
இடம் : தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை,
அண்ணா சாலை, சென்னை – 600 002 …
10.30 மு.ப. : தமிழ்த்தாய் வாழ்த்து
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை : ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.
அறிவியல் தமிழ் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து,
அறிவியல் தமிழ் வினாடி வினாவில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவச் செல்வங்களுக்குப்
பரிசு வழங்கி விழாப் பேருரை :
திரு.ராஜ்மோகன் அவர்கள்
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி,
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
வாழ்த்துரை
: திரு. வ. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப.
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
: மரு. மு. செம்மல்
மணவை முஸ்தபா அவர்களின் மகன்
: மரு. கோ. அரிகரன்
முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ,
ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை.
: மரு. இரா. மணி
முதல்வர் மற்றும் இயக்குநர்,
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை,
சென்னை
: மரு. ஆ. அரவிந்த்
கல்லூரி முதல்வர், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை
: மரு. மு. கவிதா
முதல்வர், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை
நன்றியுரை :
திருமதி. கு. ப. சத்தியபிரியா
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், சென்னை
அறிவியல் தமிழ்க் கருத்தரங்கம் – 11.30 மணி முதல் 01.30 மணி வரை
அறிவியல் தமிழ்க்கல்வி ! கனவு மெய்ப்படும் !!
தலைமை :
முனைவர் மரு. சு. நரேந்திரன்
சிறப்புநிலை பேராசிரியர், டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம்
மரு. ஜெயஸ்ரீ
மகப்பேறு மருத்துவர்
மரு. ரூபாஸ்ரீ
துறைத் தலைவர், உடற்செயலியல் துறை,
ஸ்ரீ இலலிதாம்பிகை மருத்துவக்கல்லூரி
மரு. இளவஞ்சி
நுண்ணுயிரியல் துறை மருத்துவர்
மரு. சங்கர சரவணன்
முதல்வர்,
போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம்
மரு. ச. காசி
மேனாள் உதவிப் பேராசிரியர்,
சென்னை மருத்துவக்கல்லுரி
மரு. ஆ. செந்தில்வடிவு
பதிவாளர்,
தமிழ்நாடு மருத்துவ ஆலோசனைக்குழு
திரு. க. வெற்றிவேல்
நவீன வேளாண்மை செயற்பாட்டாளர்
முனைவர் சுரேஷ் கண்ணையன்
நிறுவனர்,
மென்மொழி தொழில்நுட்ப நிறுவனம்
நாட்டுப்பண்
செய்தி வெளியீடு எண்: 356
செய்தி வெளியீடு
நாள்: 08.07.2026
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாளை ( ஜுன் – 15 ) முன்னிட்டு சென்னை, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கத்தில் அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாள் விழா மாண்புமிகு பள்ளிக்கல்வி,தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் 09.07.2026
வியாழக்கிழமையன்று கொண்டாடப்படவுள்ளது.
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் தமிழ்மீது அளப்பறிய பற்றுக் கொண்டு நவீன அறிவியல் போன்ற துறைகளிலும் தமிழ்மொழி தடம் பதிக்க வேண்டும் என்ற அக்கறையோடு செயல்பட்ட அரிய ஆளுமை ஆவார்.
பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியத்தை தமிழில் கொண்டு வருவதற்கான குழுவைத் தலைமையேற்று வழி நடத்தியவர்.
அறிவியல் தமிழ் கருத்தரங்கை முதன்முதலில் நடத்தியவர்.
அறிவியல், தொழில்நுட்பம். மருத்துவம். கணினி ஆகிய துறை சார்ந்த கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டு அறிவியல் தமிழ் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றியவர்.
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாளை ( ஜூன் – 15 ) அரசு விழாவாக கொண்டாடும் பொருட்டு 09.07.2026 வியாழக்கிழமை அன்று சென்னை. தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கத்தில் ‘அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படவுள்ளது.
தொடக்கவிழாவிற்குப் பிறகு அறிவியல் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சிறப்பாக கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாள் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் ந. அருள் வரவேற்புரை ஆற்றவுள்ளார்.
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றம் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் அறிவியல் தமிழ் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து, அறிவியல் தமிழ் வினாடி வினாவில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவச் செல்வங்களுக்குப் பரிசு வழங்கி விழாப் பேருரை ஆற்றவுள்ளார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் திரு. வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், மணவை முஸ்தபா அவர்களின் மகன் மரு. மு. செம்மல், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முதல்வர் மரு.கோ.அரிகரன், சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, முதல்வர் மரு. ஆ. அரவிந்த், சென்னை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, முதல்வர் மரு. மு. கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் திருமதி கு.ப.சத்தியபிரியா நன்றியுரை ஆற்றவுள்ளார்.
தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சிறப்புநிலை பேராசிரியர் முனைவர் மரு. சு. நரேந்திரன் அவர்களின் தலைமையில் அறிவியல் தமிழ்க்கல்வி !
கனவு மெய்ப்படும் ! என்ற தலைப்பில் அறிவியல் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் மரு, ஜெயஸ்ரீ, மரு. ரூபாஸ்ரீ, மரு. இளவஞ்சி, மரு. சங்கர சரவணன், மரு. ச. காசி, மரு. ஆ. செந்தில்வடிவு, திரு. க. வெற்றிவேல், முனைவர் சுரேஷ் கண்ணையன் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான முன்னெடுப்புகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.
தமிழ் வளர்ச்சி இயக்குநர்
வெளியீடு: இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை – 600 009

Add a Comment