”
Arul.2009/FB/#69018
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்திலுள்ள 2 பிரிவுகளில் 8 இருக்கைகளிலுள்ள 79 கோப்புகள் மற்றும் 40 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 01.07.2026 புதன் கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறுவன அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
தமிழில் வரைவுகளில் ஒற்றுப் பிழைகளை தவிர்ப்பதற்கு இன்றைய கணினி உலகில் தமிழ் தட்டச்சு முறைமைகள் எளிதாக அமைந்துள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும் அலுவலக முகப்பில் பெயர்ப்பலகையில் தினமும் ஒரு திருக்குறள் மற்றும் கலைச்சொல்லாக்கம் எழுதுவதற்கும் வலியுறுத்தினேன்.
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் முனைவர் பெ. குப்புசாமி, இணை இயக்குநர் முனைவர் நா. அருள் முருகன், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா மற்றும் உதவியாளர் முனைவர் க. புவனேசுவரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Add a Comment