POST: 2026-07-05T10:13:14+05:30

”
Arul.2009/FB/#69017

ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம்

சிறந்த இரு மாவட்டங்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 30.06.2026 செவ்வாய்க்கிழமையன்று மாலை 5 மணி அளவில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பத்தாம் தளத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்தியமைக்காக 2023 – ஆம் ஆண்டிற்கான கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.2.25 இலட்சத்திற்கான வரைவோலைகளை

முன்னாள் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப.,

முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பி. என். ஸ்ரீதர் இ.ஆ.ப.,

ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *