”
Arul.2009/FB/#69009
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2026 ஏப்பிரல், 2026 மேத் திங்கள்களில் அலுவலக நடவடிக்கைகளின்படி 8 பிரிவுகளில் 40 இருக்கைகளிலுள்ள 369 கோப்புகள் மற்றும் 136 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் ஆய்வுசெய்து குறிப்புகள் எடுக்கப்பெற்ற ஆய்வறிக்கை தொடர்பாக 25.06.2026 வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டத்தில் நிறுவன அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் திருமதி செ. அமுதவல்லி, தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் முனைவர் இரா. அன்பரசி, கண்காணிப்பாளர் திருமதி ஜெ.சாவித்ரி , உதவியாளர் வீ. வடிவேலு மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Add a Comment