POST: 2026-06-20T10:16:14+05:30

”
Arul.2009/FB/#69002

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் 36 பிரிவுகளில் 282 இருக்கைகள் உள்ளன

282 இருக்கைகளிலுள்ள 507 பதிவேடுகள், 6432 கோப்புகளைத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு குறிப்புகள் எடுக்கப்பட்ட நுண்ணாய்வுக் குறிப்பினை 18.6.2026 வியாழக்கிழமை
பிற்பகல் 1.00 மணியளவில் சென்னை பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் திரு. ச. கண்ணப்பன், அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தேன்.

அலுவலக நடவடிக்கைகள் அனைத்து நிலையிலும் நூற்றுக்கு நூறு தமிழிலேயே அமைய வேண்டும் என்றும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கை நிறைவேற்ற இயலும் என்றும்

ஆட்சி மொழித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிட
அலுவலர்களின் ஈடுபாடு, ஆர்வம், தேடல், பணித்திறன் மூலம்தான் இலக்கை நாம் அடைய முடியும் என்பன போன்ற பல தகவல்களை இயல்பாக விரித்துரைத்தேன்.

வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கு துணைபுரியும் நீச்சல்காரன் என்ற மென்பொருள் குறித்தும் சொற்குவையில் உள்ள 15 இலட்சம் ஆங்கிலச்சொற்களுக்கு நிகரான தமிழ்சீசொற்களைப் பயன்படுத்தவும் கூறினேன்.

அரிய சொற்களையும், தேவைக்கு உரிய சொற்களையும் பெற,
ஆட்சிச் சொல் அகராதியைப் பயன்படுத்துவதன் தேவையினையும் இன்றைய
கணினியுலகில் தமிழ்த்தட்டச்சு முறைமைகள் எளிதாக அமைந்துள்ள தகவல்களைச் சொல்லி வலியுறுத்தினேன்.

நிகழ்வில் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு. ச. கண்ணப்பன்,
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திரு. திரு. பா. விஜயபாண்டியன், உதவியாளர் திரு.செந்தில் குமார், தட்டச்சர் திரு. திரு. இராமகிருஷ்ணன் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *