POST: 2026-06-18T08:53:45+05:30

”
Arul.2009/FB/#69000

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் 21 பிரிவுகளில்
117 இருக்கைகள் உள்ளன.

117 இருக்கைகளிலுள்ள 152 பதிவேடுகள் 4358 கோப்புகளைத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு குறிப்புகள் எடுக்கப்பட்ட நுண்ணாய்வுக் குறிப்பினை புதன்கிழமை 17.6.2026
பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை பதிவுத் துறைத் தலைவர் அலுவலகத்தில் பங்கு கொண்டு ஆய்வறிக்கையினை பதிவுத்துறை கூடுதல் தலைவர் திரு. இரா. ஜனார்த்தனம் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தேன்.

அலுவலக நடவடிக்கைகள் யாவும் அனைத்து நிலையிலும் நூற்றுக்கு நூறு தமிழிலேயே அமைய வேண்டும் என்றும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இலக்கை நிறைவேற்ற இயலும் என்றும்

அரசு ஆணைகள், மற்றும் அறிவுரைகளால் மட்டுமே ஆட்சி மொழித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிட முடியாது.

அலுவலர்களின் ஈடுபாடு, ஆர்வம், தேடல், பணித்திறன் மூலம்தான் திட்டங்களின் இலக்கை நாம் அடைய முடியும் என்பன போன்ற பல தகவல்களை இயல்பாக விரித்துரைத்தேன்.

அரிய சொற்களையும், தேவைக்கு உரிய சொற்களையும் பெற,
ஆட்சிச் சொல் அகராதியைப் பயன்படுத்துவதன் தேவையினையும் இன்றைய
கணினியுலகில் தமிழ்த்தட்டச்சு முறைமைகள் எளிதாக அமைந்துள்ள தகவல்களை சொல்லி வலியுறுத்தினேன்.

நிகழ்வில் பதிவுத்துறை கூடுதல் தலைவர் திரு. இரா.ஜனார்த்தனம்,
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திரு விக்னேஷ், உதவியாளர்கள் திரு சதீஷ், திரு கோகுல் மற்றும் பதிவுத் துறையின் அலுவலர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *