POST: 2026-06-12T10:55:18+05:30

”
Arul.2009/FB/#68994

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

09.06.2026 செவ்வாய்க்கிழமையன்று முற்பகல் 11.30 மணியளவில் தமிழ்நாடு மின்சார வாரியத்திலும்,
பிற்பகல் 4.30 மணியளவில் பொது நூலகத் துறையிலும் உள்ள பிரிவுகளில் பேணப்படும் வருகைப்பதிவேடு, பயணநிரல், அனுப்பப்பட்ட கடிதங்கள், காலமுறை அறிக்கைகள், அலுவலக ஆணைகள், செயல்முறை ஆணைகள், முத்திரைகள், பெயர் / தகவல் பலகைகள், கோப்புகள், கணினியில் தமிழ் மென்பொருள் பயன்பாடு, வலைதளம் மற்றும் பிற பதிவேடுகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இரண்டு நாள்கள் ஆய்வுசெய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டங்களில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே உரையாற்றினேன்.

அக்கூட்டங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதோடு, அதனைச் செயற்படுத்துவதற்கான அறிவுரையும் வழங்கப்பட்டன.

மேலும் 1973 ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அரசாணையில் தெரிவித்துள்ளபடி அலுவலக முத்திரைகளில் ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை பொறிப்பதற்கும்
2008 ஆம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணையில் தெரிவித்தபடி அலுவலக ஆணை, கடிதங்கள் மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு நேரான தமிழ் திங்கள் நாள் திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டன.

குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1998 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி பண்பாடு (மற்றும்) அறநிலையத் (தவ1-1) துறை அரசாணையில் ஆணையிடப்பட்டதற்கிணங்க
அரசு ஊழியர் பெயருக்கு முன் ஊர் /தந்தையின் பெயரின் முதல் எழுத்தினை தமிழிலேயே எழுதுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் திருமதி
மு.அம்பிகா, துணைத் தலைமைப் பொறியாளர் திருமதி கலைச்செல்வி, தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா கண்காணிப்பாளர் திருமதி மலையரசி
மற்றும் உதவியாளர் திரு தெ.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பொது நூலகத் துறையின் இணை இயக்குநர் திருமதி மா.தனலட்சுமி, தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி பா.கனிமொழி, உதவியாளர் திருமதி த.புஷ்பலதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *