POST: 2026-06-11T09:56:22+05:30

”
Arul.2009/FB/#68993

திரையில் மறையலாம்!
திரையே மறையலாமா?

​அனுபவங்களைப் படமாக்குபவர்கள் பலர்.

ஆனால், திரையார்வலர்களுக்கு அனுபவத்தையே அனுபவிக்க வைத்துப் படம் எடுத்தவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா ஆவார்.(1941-2026)

பள்ளி மாணவனாக இருந்த பொழுது கொடைக்கானலில் வாலிபமே வா வா திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொழுது நேரில் சந்தித்து அப்பாவுடன் பேசி மகிழ்ந்தார்.

​மாநிலக் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்தபோது
என் பெற்றோர்களுடன் அவரின் முதல் மரியாதை திரைப்படத்தின் முன்காட்சிக்குச் சென்றிருந்தேன்.
அப்பொழுதும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களைச் சந்தித்தேன்.

​அவர் என்னை உற்றுப்பார்த்து, “என்னப்பா, அப்படியே உன் அப்பாவின் ஜெராக்ஸ் காப்பியாக இருக்கிறாயே!” என்று கூறிப் பாராட்டினார்.

​நாள்தோறும் அப்பா முதல் மரியாதைப் படத்தில் இடம்பெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களை வரிவிடாமல் சுட்டிக்காட்டி பாராட்டுவார்.

​“போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு…” என்ற பாடல் வரியைக் கேட்கும்போதெல்லாம், அதைக் கேட்பவர்களின் கண்களிலிருந்து பொலபொலவென நீர் உதிர்வதை நான் நேரில் பலமுறை கண்டிருக்கிறேன்.

​சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களைப் ‘பாம்குரோவ்’ விருந்தகத்துக்கு அருகிலுள்ள அவருடைய அலுவலகத்திற்குச் சென்று சந்தித்து மகிழ்ந்தேன்.

​மூன்று மாதங்களுக்கு முன்பு, தியாகராய நகரிலுள்ள பாரதிராஜா மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, “அவர் மேல் தளத்தில்தான் உள்ளார்; ஆனால் இப்போது யாரையும் பார்க்கமாட்டார்” என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.

​ஆகாயத்திற்கு அடுத்து, அதிகமான நட்சத்திரங்களைத் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் அவர்.

​அல்லி நாட்டு அரசர்!

​”என் இனிய தமிழ் மக்களே…” உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா என்று தன்னுடைய கரகரப்பான குரலில் மிடுக்காக தமிழ் மக்களை விளித்த பெருமைக்குரியவர்.

​”மந்தையிலே நின்றாலும் நீங்கள் வீரபாண்டி தேரு!” என்று போற்றப்பட்ட ஆளுமை மறைந்த செய்தி, நெஞ்சை வருந்தச் செய்கிறது.

அவரின் திரைக்காவியங்களின் வழியாக நாம் புகுந்து பார்த்தால் அவரை இன்னமும் நேரடியாகக்காணலாம்

​ஆழ்ந்த இரங்கல்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *