POST: 2026-05-31T10:59:30+05:30

”
Arul.2009/FB/#68982

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

29.05.2026 வெள்ளிக்கிழமையன்று முற்பகல் 11.00 மணியளவில் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் துறை இயக்ககத்திலும்,

முற்பகல் 11.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் தனியார் பள்ளிகள் இயக்ககத்திலும்

முற்பகல் 12.00 மணியளவில் தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வி இயக்ககத்திலும்

உள்ள பிரிவுகளில் பேணப்படும் வருகைப்பதிவேடு, பயணநிரல், அனுப்பப்பட்ட கடிதங்கள், காலமுறை அறிக்கைகள், அலுவலக ஆணைகள், செயல்முறை ஆணைகள், முத்திரைகள், பெயர் / தகவல் பலகைகள், கோப்புகள், கணினியில் தமிழ் மென்பொருள் பயன்பாடு, வலைதளம் மற்றும் பிற பதிவேடுகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இரண்டு நாள்கள் ஆய்வுசெய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டங்களில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே உரையாற்றினேன்.

அக்கூட்டங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதோடு, அதனைச் செயற்படுத்துவதற்கான அறிவுரையும் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அரசுத் தேர்வுகள் துறையின் இயக்குனர் திருமதி க. சசிகலா , தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி மு. சாந்தி கண்காணிப்பாளர் திருமதி ஆ.கவிதா மற்றும் உதவியாளர் திருமதி த. புஷ்பலதா ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு அரசின் தனியார் பள்ளிகள் இயக்ககத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தனியார் பள்ளிகள் இயக்கக இயக்குநர் முனைவர் ச.சுகன்யா, தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, கண்காணிப்பாளர் திருமதி ஜெ. சாவித்திரி உதவியாளர் திரு.ம.கேசவராஜி ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் துணை இயக்குநர் திரு.கோ.சுப்பாராவ், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி ந.நிலா கண்காணிப்பாளர் திருமதி ஜெ.சாவித்திரி மற்றும் உதவியாளர் திருமதி சு.மாலதி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *