”
Arul.2009/FB/#68979
அன்னையின் திருப்பணி
அணி 1
காலத்தின் சுவடுகளில் சில நிகழ்வுகள் மட்டும் என்றும் பசுமை மாறாத காவியங்களாக நிலைத்து விடுகின்றன.
தமிழ்ப்பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகத்தில் வசிப்போர் ஒரு திருக்கோயில் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தபோது, என் அன்னையார் மருத்துவமாமணி தாரா நடராசன் (அன்றைய தஞ்சை அரிமா மகளிர் சங்கத் தலைவர்) அவர்கள் அதற்காகப் பெருமுயற்சி எடுத்தார்.
இந்தியன் வங்கியின் அந்நாளைய தலைவர் டாக்டர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களின் நிதியுதவி எனும் பெருங்கொடையால் அருள்மிகு ஆலயம் கட்டப்பெற்றது.
‘பல்கலை விநாயகர் என்று திருப்பெயர் சூட்டப்பட்டது.
சிறப்புமிக்க பல்கலை விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு, 16.05.1994 திங்கட்கிழமை அன்று தவத்திரு. காத்தையா சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
என் அன்னையார் எழுப்பிய கோயில் என்கிற பெருமிதம் ஒருபுறம்… அக்கோயில் உருவானபோது என் தந்தையார் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார் என்கிற நெகிழ்ச்சி மறுபுறம்…
அன்றைய நிகழ்ச்சியின் படக்காட்சியகம்

Add a Comment