”
Arul.2009/FB/#68968
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
14.05.2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.45 மணியளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலும்,
பிற்பகல் 3.00 மணியளவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திலும்
உள்ள பிரிவுகளில் பேணப்படும் வருகைப்பதிவேடு, பயணநிரல், அனுப்பப்பட்ட கடிதங்கள், காலமுறை அறிக்கைகள், அலுவலக ஆணைகள், செயல்முறை ஆணைகள், முத்திரைகள், பெயர் / தகவல் பலகைகள், கோப்புகள், கணினியில் தமிழ் மென்பொருள் பயன்பாடு, வலைதளம் மற்றும் பிற பதிவேடுகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இரண்டு நாள்கள் ஆய்வுசெய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டங்களில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே உரையாற்றினேன்.
அக்கூட்டங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதோடு, அதனைச் செயற்படுத்துவதற்கான அறிவுரையும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் மாவட்ட வருவாய் அலுவலர் / பொது மேலாளர் முனைவர் இரா. சுமன், துணை ஆட்சியர்(நிருவாகம்), திருமதி இர. கிருபா உஷா, துணை ஆட்சியர் திருமதி ந. இலட்சுமி, துணை ஆட்சியர் திருமதி க.தீபா, தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி ரா. சிவசங்கரி, கண்காணிப்பாளர் திருமதி மு. சர்மிளா பானு ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் வாரியச் செயலாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு. வெங்கடேஷ், துணை ஆட்சியர் (நிருவாகம்) திருமதி இராணி, தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி ந. நிலா, உதவியாளர் சு. மாலதி ஆகியோர் உடனிருந்தனர்.

Add a Comment