POST: 2026-05-15T10:47:22+05:30

”
Arul.2009/FB/#68966

பணிநிறைவு பாராட்டு

​ தலைமைச் செயலகத்தின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் கீழ் இயங்கும் மொழிபெயர்ப்புப் பிரிவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்று, 15.06.2016 அன்று உதவிப் பிரிவு அலுவலராகப் பணியில் இணைந்த திரு. பாஸ்கர் அவர்கள், சட்டப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற அறிஞராவார்.

​தன்னிகரற்ற தமிழ் ஆர்வத்துடன் மொழிபெயர்ப்புப் பணியில் தன்னைச் செதுக்கிக்கொண்ட இவர், தனது அயராத உழைப்பினால் பிரிவு அலுவலர், உதவி இயக்குநர் என அடுத்தடுத்த பதவி உயர்வுகளைப் பெற்றார்.

அரசுப் பணியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த இவர், 30.04.2026 அன்று பணி நிறைவு பெற்று ஓய்வு பெற்றார்.

​அவரது சீரிய பணியைப் பாராட்டி, அவருக்குப் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தேன்.

இப்பிரிவில் உதவி இயக்குநராக இருந்த திருமதி. காயத்ரி அவர்கள் அக்டோபர் 2012-ல் பணிநிறைவு பெற்ற பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின் அதே பொறுப்பிலிருந்து திரு. பாஸ்கர் அவர்கள் தற்போது ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

​அவரது ஓய்வுக்காலம் உடல் நலத்துடனும் மனநிறைவுடனும் அமைய நெஞ்சார வாழ்த்துகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *