”
Arul.2009/FB/#68963
திரு சுந்தர் அவர்களுக்குப் பணி நிறைவு பாராட்டு விழா.
தமிழ் வளர்ச்சித் துறையில் சென்னை மட்டுமின்றிப் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளாகப் பல்வேறு நிலைகளில் சிறப்பாகப் பணியாற்றிய திரு. சுந்தர் அவர்கள், மேனாள் துணை இயக்குநர்களான திரு. ம.சி.தியாகராசன் (30.06.2022), திருமதி தி.உமா (30.06.2022),
திருமதி. ப.இராஜேஸ்வரி (28.02.2023), திரு. கா.பொ.இராசேந்திரன் (31.05.2023),
திருமதி. அ.புவனேசுவரி (31.03.2024), திரு. ப.நாகராசன் (31.07.2024) திருமதி. பி. ரெஜினாள் மேரி (31.05.2025) ஆகியோர் வரிசையில்
30.04.2026-ஆம் நாளன்று துணை இயக்குநராக திருப்பூர் மாவட்டத்தில் பணி நிறைவு பெற்றார்.
அவரது ஓய்வையொட்டி, சென்னை தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை மே ஆறாம் நாளன்று பணி நிறைவுப் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அவ்விழாவில், அவரது நீண்ட காலப் பணித்திறனைப் பாராட்டிப் உரையாற்றினோம்.
தனது பெயருக்கேற்றார் போல, முகம் மலர்ந்த புன்னகையுடன் அவர் வழங்கிய ஏற்புரை, அங்கிருந்த அனைவருக்கும் ஒரு சிறந்த ஊக்கவுரையாக அமைந்தது.

Add a Comment